ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் மகளுக்கு வந்த சோதனை... வாக்குசீட்டு முறையை கொண்டு வந்த விவசாயிகள்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா போட்டியிடும் நிஜாமாபாத் மக்களவை தொகுதியில் விவசாயிகள் உள்பட ஏராளமானோர் போட்டியிடுவதால் அங்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி நிறைவடைகிறது. இதில் ஏப்ரல் 11ம் தேதி முதல்கட்டமாக தெலுங்கானா, ஆந்திரா முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது

Kavitha

தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கவிதாவை எதிர்த்து அங்கு ஏராளமான விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 178 விவசாயிகள் உள்பட 185 பேரின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் மஞ்சள் மற்றும் சோளம் பயிரிட்ட விவசாயிகள் தங்கள் பயிருக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையை தெலுங்கானா அரசு வழங்காததால் அதிருப்தி அடைந்தனர். இதனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகருக்கு பாடம் புகட்டும் வகையில் அவரது மகள் சந்திரசேகருக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனுதாக்கல் செய்தனர்.

புதிய தொழிலுக்கு 3 வருடங்கள் எந்த அனுமதியும் தேவையில்லை.. ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி அறிவிப்பு புதிய தொழிலுக்கு 3 வருடங்கள் எந்த அனுமதியும் தேவையில்லை.. ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி அறிவிப்பு

இதன்காரணமாகவே இப்போது நிஜாமாபாத்தில் 185 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். புதிய மிஷினை இறக்கி தேர்தலை நடத்தலாமா என யோசித்த தேர்தல் ஆணையம், கடைசியில் பழைய முறையான வாக்கு சீட்டு முறைக்கு மாறியுள்ளது. ஏனெனில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அதிகபட்சமாக 63 வேட்பாளர்கள் பெயரைத்தான் சேர்க்க முடியும். கூடுதலாக நோட்டாவை மட்டுமே சேர்க்க முடியும் என்பதால் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

English summary
Telangana Chief Minister KCR's daughter K. Kavitha facing with 185 Candidates in Nizamabad, To Vote Using Ballot Paper
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X