ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: வேலை இல்லாமல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவருக்கு அபுதாபியில் வாங்கிய லாட்டரியில் ரூ.28 கோடி பரிசு விழுந்து இருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ரிக்கலா விலாஸ் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். விவசாயியான இவர் வறுமையின் காரணமாக அண்மையில் வேலை தேடி துபாய் சென்றார்.

Telangana man won Rs 28 crore in UAE lottery

ஆனால் எவ்வளேவோ முயற்சி செய்தும் அங்கு இவரால் வேலை எதையும் பெற முடியவில்லை இதனால் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த விலாஸ், அபுதாபியில் விற்றுக்கொண்டிருந்த லாட்டரி சீட்டை வாங்க ஆசைப்பட்டார். ஆனால் அவரிடம் பணம் இல்லை. ஆனாலும தன் மனைவிக்கு போன் செய்து ரூ.20 ஆயிரம் வாங்கி அவர். நண்பர் ரவியோடு சேர்ந்து சீட்டை வாங்கினார். பிறகு வேலையில்லாமல துபாயில் இருக்க மனம்இல்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டார்

இந்நிலையில்,லாட்டரியில் 15 மில்லியன் திர்ஹாம் விழுந்திருப்பதாக நேற்று மாலை அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த விலாஸ், மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய்விட்டார். இதை அவரால் நம்பவே முடியவில்லை. லாட்டரி சீட்டில் அவருக்கு விழுந்த பணத்தின் இந்திய மதிப்பு, சுமார் 28 கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும்.

Telangana man won Rs 28 crore in UAE lottery

இதுபற்றி ரிக்கலா விலாஸ் கூறுகையில், ஏற்கனவே துபாயில் டிரைவராக வேலை பார்த்திருக்கிறேன். அப்போது அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவேன். இப்போது என்னிடம் பணமில்லாததால், மனைவி பத்மாவிடம் பணம் வாங்கி அபுதாபியில் வேலை பார்க்கும் நண்பன் ரவியிடம் கொடுத்து, லாட்டரி டிக்கெட் வாங்கச் சொன்னேன். அதற்கு பரிசு விழுந்திருக்கிறது. இதற்கு முழு காரணம் என் மனைவி பத்மாதான். என் குழந்தைகளை நல்ல படியாக படிக்க வைக்க அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

English summary
Telangana man Vilas Rikkala won Rs 28 crore in a lottery in a big ticket UAE lottery
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X