ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்ப சிக்கன் சாப்டறோம்.. கொரோனா எப்படி வருதுன்னு பார்ப்போம்.. அசத்திய தெலுங்கானா அமைச்சர்கள்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வரும் என்ற வதந்திக்கு தெலுங்கானா அமைச்சர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சீனாவில் வுகான் மாகாணத்தில் ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சொல்லப்படுகிறது. மேலும் வவ்வால், பாம்பு ஆகியவற்றிலிருந்தும் அந்த வைரஸ் பரவுவதாகவும் அதை சீனர்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கும் இந்த நோய் கடந்த ஆண்டு இறுதியில் பரவியதாகவும் சொல்லப்படுகிறது.

Telangana Ministers eat Chicken for Coronavirus fears

இதனால் சீனாவில் 2,835 பேர் பலியாகிவிட்டனர். 17 ஆயிரம் பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்டார்ட்டிகாவை தவிர ஏனைய கண்டங்களில் கொரோனா பரவிவிட்டது. பெரும்பாலான அரசுகள் சீன நாட்டினர் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 2,835 ஆக உயர்வு சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 2,835 ஆக உயர்வு

இந்த நிலையில் கோழிக் கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சிக்கன் கடைக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோழிக் கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதை தெலுங்கானா அமைச்சர்கள் செயல்முறை விளக்கம் காட்டினர். அமைச்சர்கள் கேடி ராமாராவ், எடேலா ராஜேந்தர், தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் ஆகியோர் ஒரு பொது மேடையில் லெக்பீஸை சாப்பிட்டு காண்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னணி சிக்கன் விற்பனை நிறுவனமான கேஎஃப்சி ஏற்பாடு செய்திருந்தது.

English summary
Telangana Ministers eat Chicken for Coronavirus fears on public stage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X