ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்எல்ஏவுக்கு கைகளால் உணவு ஊட்டிய 10ஆம் வகுப்பு மாணவியால் சர்ச்சை!

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்எல்ஏவுக்கு உணவு ஊட்டிய 10ஆம் வகுப்பு மாணவியால் சரச்சை!

    ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் நடந்த பிரிவு உபசார விழாவில் டிஆர்எஸ் கட்சியின் கான்பூர் எம்எல்ஏ ராஜையாவுக்கு மாணவி ஒருவர் கைகளால் சாப்பாடு ஊட்டி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தில் உள்ள கான்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் டி ராஜையா. ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த அவர் அண்மையில் சில்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றார்.

    தாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்!தாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்!

    ஊட்டியது சர்ச்சை

    ஊட்டியது சர்ச்சை

    அங்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சாப்பாட்டை கைகளால் ஊட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உணவு

    உணவு

    மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவு நேரத்தின் போது நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் அந்த எம்எல்ஏவுக்கு மாணவி சாப்பாடு ஊட்டி விட அருகில் ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்தார். இந்த வீடியோ வைரலாகிவிட்டது.

    உணவு

    உணவு

    இதையடுத்து எம்எல்ஏவை விமர்சிக்கத் தொடங்கினர். இதையடுத்து ராஜையா இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தார். அவர் கூறுகையில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அவர் எனக்கு உணவு ஊட்டிவிட விரும்பினார்.

    விமர்சனம்

    அதனால் அந்த மாணவியை எனது மகளாக கருதி உணவு ஊட்ட அனுமதித்தேன். இந்த உண்மை தெரியாத சிலர் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர் என்றார் ராஜையா.

    English summary
    Telangana MLA erupts in ro after school hand feeds him in School headmaster retirement function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X