ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓங்கி தலையில் அடித்த டிஆர்எஸ் எம்எல்ஏவின் தம்பி.. மயங்கி விழுந்த அனிதா.. தெலுங்கானாவில் ரவுடித்தனம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆளும் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட வனத்துறை நிலத்தில் மரங்கள் நடுவதற்காக சென்ற பெண் வனத்துறை அதிகாரியை தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தொண்டர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் கொமரம் பீம் அஸிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபூர் ககஜ்நகரில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்எல்ஏ கொனேரு கொனப்பா மற்றும் அவரது சகோதரரும் ஜில்லா பரிசித் தலைவரும் ஆக்கிரமித்து இருந்ததாக கூறப்படுகிறது.

 Telangana Rashtra Samithi workers attacked women forest officer during a tree plantation drive

இந்த நிலங்களை மீட்டு அதில் மரங்களை நடுவதற்காக போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று சென்றனர். ஆனால் அவர்களை செல்லவிடாமல் ஆளும் கட்சி எம்எல்ஏ கொனேரு கொனப்பா எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்

அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நிலையில், திடீரென போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது ஆளும் கட்சி தொண்டர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். இதில் பெண் வன அதிகாரி அனிதா என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீஸ் அதிகாரிகள் தாக்குதலில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியான பின்னர் நிலத்தை ஆக்கிரமித்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் கிருஷ்ணா பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ஆதிவாசி மற்றும் பழங்குடி விவசாயிகள் நிலங்களை வனத்துறையினர் வலுக்கட்டாயமாக பறிக்க முயற்சித்தனர். பயிரிட்ட நிலங்களை வனத்துறையினர் அழித்தனர். இதனால் ஆத்திரத்தில் அவர்கள் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டார்கள். இது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து என சமாளித்துள்ளார்.

போலீஸ் மற்றும் வன அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 பேர் போது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Telangana: A police team & forest guards were attacked allegedly by Telangana Rashtra Samithi workers in Sirpur Kagaznagar block of Komaram Bheem Asifabad district, during a tree plantation drive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X