ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் மத நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: டெல்லியில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ள நிலையில் அங்கு தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் அலுவலக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 6 பேர் தற்போது உயிரிழந்துள்னர். உயிரிழந்த ஆறு பேரும் டெல்லி நிஜாமுதினில் மார்ச் 13 முதல் 15 வரை ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவர்.

    கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்! கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்!

    தகவல் தாருங்கள்

    தகவல் தாருங்கள்

    ஆறு பேரில் இருவர் ஹைதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையிலும், தலா இரண்டு பேர் தனியார் மருத்துவமனைகளிலும், நிஜாமாபாத் மற்றும் கட்வால் நகரங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். மாவட்ட ஆட்சி தலைவர்களின் கீழ் உள்ள சிறப்பு குழுக்கள் இந்த நபர்களுடன் தொடர்பு கொண்ட நபர்களை அடையாளம் கண்டு மருத்துவமனைகளில் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குடிமக்களுக்கும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குறித்து ஏதேனும் தகவல்கள் மக்களிடம் இருந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்து தெரியபடுத்த வேண்டும்.

    தொடர்பு கொண்டவர்கள்

    தொடர்பு கொண்டவர்கள்

    டெல்லியில் மார்க தொழுகைக்குச் சென்ற அனைவரும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தெலுங்கானா அரசு உரிய சோதனைகளை நடத்தி அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும். அவர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட எவரும் அரசு அதிகாரிகளுக்கு உடனே தகவல்களை தெரிவிக்க வேண்டும், " இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மத வழிபாட்டு கூட்டம்

    மத வழிபாட்டு கூட்டம்

    மார்ச் 1-15 முதல் இந்தோனேசியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நிஜாமுதீன் மேற்கில் உள்ள தப்லீ-இ-ஜமாஅத் சபையில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தெற்கு டெல்லி பகுதி முழுவதும் டெல்லி காவல்துறையினரால் கிட்டத்தட்ட சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அனுமதியின்றி மத கூட்டம் நடந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவு

    எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவு

    மேற்கு நிஜாமுதீனில் அனுமதியின்றி வழிபாட்டு கூட்டத்தை நடத்தி மவுலானாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. கொரோனா வைரஸ் பரவுவதை கண்டுபிடிக்க டெல்லி அரசாங்கம் பாதிக்கப்பட்ட இரண்டு காலனிகளில் வீடு வீடாக மேப்பிங் பயிற்சியை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் இருந்து டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.

    English summary
    Telangana reports six COVID-19 positive cases die those who attended a religious prayer meeting from March 13 to 15 at Markaz in Nizamuddin area in Delhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X