ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கானா தேர்தல்.. 2 லட்சம் இளைஞர்களை கூட்டி மாஸ் பேரணி நடத்த போகும் பாஜக!

தெலுங்கானா தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சியின் இளைஞர் அணி பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா பெரிய பேரணி ஒன்றை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சியின் இளைஞர் அணி பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா பெரிய பேரணி ஒன்றை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு சில மாதம் முன் பதவி விலகினார். இந்த நிலையில் தெலுங்கானாவிற்கு வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு தேர்தல் குறித்த கூட்டணிகள், விவாதங்கள் இப்போதே தொடங்கிவிட்டது.

Telangana: With elections in mind, BJYM to organise a three-day programme in Hyderabad

இதற்காக பாஜக தெலுங்கானாவில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. தெலுங்கானா தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா பெரிய பேரணி ஒன்றை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது.

இந்த பேரணியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி வைக்கிறார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். பாஜகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

[விதம் விதமான ஹேர்ஸ்டைல்.. அசரடிக்கும் மேக்கப்.. ஆனால் அனிதாவின் வேலை என்ன தெரியுமா!]

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சகர் பியூஸ் கோயல், பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அஸ்ஸாம் முதல்வர் சோனோவால், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார், பாஜக பொதுச்செயலாளர் ராம் மஹாதேவ், ராம் லால், பொறுப்பு பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் ஆகிய பெரும் படை இதில் கலந்து கொள்ள இருக்கிறது.

பாஜக கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா நடத்தும் மிகப்பெரிய பேரணி இதுதான் என்று பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய தலைவர் பூனம் மகாஜன் தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலையும், அடுத்து தெலுங்கானாவில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலையும் கருத்தில் கொண்டு இந்த பேரணியை நடத்த இருக்கிறார்கள். இளைஞர் வாக்குகளை குறிவைக்கும் வகையில் இந்த பேரணி நடக்க உள்ளது.

வரும் அக்டோபர் 28ம் தேதி இந்த பேரணி திட்டமிடப்பட்டு இருக்கிறது . தெலுங்கானா தேர்தல் டிசம்பர் 7ல் நடக்க உள்ளதால் இந்த பேரணி பெரிய உதவியாக இருக்கும். 25 லட்சம் புதிய இளைஞர்கள் இதன் மூலம் நேரடியாக கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டுகிறது.

இந்த பேரணியில் 2 லட்சம் இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக தெலுங்கானாவில் எங்கு எல்லாம் வலிமையின்றி இருக்கிறதோ அங்கு எல்லாம் இந்த பேரணியை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

English summary
Bharatiya Janata Yuva Morcha (BJYM) is planning a big show in Hyderabad where not only 72 thousand office bearers of the youth wing of Bharatiya Janata Party will gather but it also plans a big rally in which around two lakh youths will participate. The programme will be inaugurated by Union home minister Rajnath Singh and the rally will be addressed by party president Amit Shah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X