ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெலுங்கானா பதுகம்மா : மலர்களால் அலங்கரித்து கோலாட்டம் ஆடி கொண்டாடிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

நவராத்திரி பண்டிகை தெலுங்கானாவில் பதுகம்மா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்களால் அலங்கரித்த பதாகைகளை சுற்றி கோலட்டம் ஆடி உற்சாகமாக கொண்டாடினார் அனைவருக்கும் பு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை 'பதுகம்மா பண்டிகை' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தெலுங்கானாவில் ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதுகம்மா விழாவை உற்சாகமாக கொண்டாடினார். உள்ளூர்மக்களுடன் கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் பதுகம்மா விழாவை பாரம்பரியமான முறையில் மலர்களால் அலங்கரித்து கொண்டாடினர்.

நாடுமுழுவதும் நவராத்திரி பண்டிகை பல விதங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வீடுகளிலும் கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுகின்றனர். பாடல்களைப் பாடி சுண்டல் படைத்து அம்மனை அழைக்கின்றனர். ஆடல் பாடல்கள் களைகட்டியது.

தெலுங்கானாவில் பதுகம்மா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் உற்சாகமாக மலர்களை அலங்கரித்து கொண்டாடுகின்றனர்.

துவங்கியது ராஜ ராஜ சோழன் 1035வது சதய விழா.. விழாக்கோலம் பூண்டது தஞ்சை துவங்கியது ராஜ ராஜ சோழன் 1035வது சதய விழா.. விழாக்கோலம் பூண்டது தஞ்சை

மலர்களால் அலங்காரம்

மலர்களால் அலங்காரம்

தெலுங்கானாவில் பித்ருபட்சம் அமாவாசை தொடங்கி துர்காஷ்டமி வரை கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் சதுலா பதுகம்பா, பெட்ட பதுகம்மா என்று கொண்டாடுகின்றனர். மலர்களை அழகாக அலங்கரித்து காவல் தெய்வமான மகா கவுரியை வழிபடுகின்றனர்.

பாரம்பரிய நடனம்

பாரம்பரிய நடனம்

அழகாக மலர்களை அடுக்கி வைத்து அம்மனே வருக என்று அழைக்கின்றனர். இந்த விழாவின் போது பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு நகைகளை அணிந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடுகின்றனர். தெலுங்கானாவில் இந்த பண்டிகை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களுக்கான பண்டிகை என கூறப்படுகிறது

அம்மன் வழிபாடு

அம்மன் வழிபாடு

தெலுங்கில், பதுகம்மா' என்பதன் பொருள் அம்மனே வருக என்பதாகும், மேலும் பெண்களின் காவல் தெய்வமான மகா கௌரியை, பதுகம்மா வடிவில் வணங்குகின்றனர். இந்த பண்டிகை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் பாரம்பரியமான உள்ளூர் பூக்களை கொண்டு மலர் பதாகைகளை தினமும் பூஜைக்கு செய்து வழிபடுவர் நவராத்திரியின் கடைசி நாளன்று அனைத்து மலர் பதாகைகளையும் ஒன்றாக ஆற்றிலோ, கடலிலோ கொண்டு சென்று விட்டுவிடுவார்கள்.

ராஜ்பவனில் கொண்டாட்டம்

ராஜ்பவனில் கொண்டாட்டம்

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தனது ஆளுநர் மாளிகையில் மலர்குவியல்களை அலங்கரித்து பெண்களுடன் கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் உற்சாகமாக அம்மனை வணங்கினார். ராஜ்பவனில் வேலை செய்யும் பெண் பணியாளர்களுக்கு புடவைகள், வளையல், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை வணங்கினார்.

English summary
Navratri is celebrated in the state of Telangana under the name 'bathukamma festival'. Tamilisai Saundarajan, the incumbent Governor of Telangana, enthusiastically celebrated the festival at the Governor's House in Hyderabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X