ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெகன் மோகனை கத்தியால் தாக்கியவர் யார் என்று தெரிந்தால் அதிர்ச்சியாவீர்கள்.. குத்த காரணம் அதைவிட ஷாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்தி குத்து.. வழிந்த ரத்தம்- வீடியோ

    விசாகபட்டிணம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் வைத்து கத்தியால் குத்திய நபர் யார் என்பதும், அவரது நோக்கம் என்ன என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் புறப்படுவதற்காக இன்று மதியம் ஜெகன்மோகன் ரெட்டி ஏர்போர்ட் சென்றிருந்தார்.

    அப்போது செல்பி புகைப்படம் எடுப்பதை போல வந்து, நடித்தபடி, திடீரென ஒரு இளைஞர் ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்தினார்.

    [விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்தி குத்து.. வழிந்த ரத்தம்.. விசாகபட்டிணத்தில் பரபரப்பு ]

    கோழிச் சண்டை கத்தி

    கோழிச் சண்டை கத்தி

    இதனால், ஜெகன் மோகன் ரெட்டி கையில் ரத்தம் வடிந்தது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து தடுத்து நிறுத்தினர். அவரிடமிருந்து கோழிச்சண்டைக்கு பயன்படுத்தக்கூடிய சிறிய வகை கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் ஸ்ரீனிவாஸ் என்பது தெரியவந்தது.

    அதே கட்சிக்காரர்

    அதே கட்சிக்காரர்

    விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஸ்ரீனிவாஸ் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விசாரணையில், மற்றொரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. ஸ்ரீநிவாஸின் பாக்கெட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அதில் ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்தான், இந்த ஸ்ரீநிவாஸ் என்பது தெரியவந்தது.

    அதிர்ச்சி காரணம்

    அதிர்ச்சி காரணம்

    ஆச்சரியமடைந்த காவல்துறையினர் தங்களுக்கே உரிய பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீனிவாஸ் அளித்த வாக்குமூலத்தில் "நான் ஒய்எஸ்ஆர் கட்சியை சேர்ந்தவன் தான். எனக்கு ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவரை கத்தியால் குத்தினால் அந்த அனுதாபத்தின் காரணமாக மக்கள் ஆதரவு அதிகம் கிடைக்கும் என்பதற்காக குத்தினேன்", என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது, சினிமாவில் நடப்பது போன்ற நாடகம் விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளதா, என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    தாக்குதலுக்கு கண்டனம்

    தாக்குதலுக்கு கண்டனம்

    இதனிடையே ஹைதராபாத் சென்ற ஜெகன்மோகன் ரெட்டி ட்விட்டரில் கூறுகையில் மக்கள் பணி செய்வதில் இருந்து என்னை இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல் தடுத்து விடாது நான் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் நான் இப்போது நலமாக உள்ளேன் என் மீது அக்கறை வைத்துள்ளவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    The accused, who attacked Jagan Mohan Reddy, is a supporter of YSRCP, investigation is on.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X