ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிஆர்எஸ் பெற்ற பலே வெற்றிக்கு.. இந்த நாலு மேட்டர்தான் மெயின் காரணம்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவில் ராஷ்ட்ரீய கட்சியின் வெற்றிக்கு காரணம் 4 விஷயங்கள்தான் என சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதற்கோ அல்லது ஆட்சியை தக்க வைப்பதற்கோ ஆட்சியாளர்கள் மக்களுக்கு செய்யும் நல்லது கெட்டதுகளை வைத்து முடிவு செய்யப்படும் என்பது அறிந்த ஒன்றே.

அது போல் தெலுங்கானாவில் முதல்வராக உள்ள சந்திரசேகர ராவுக்கு சொந்தமாக ஒரு ஓட்ட அம்பாசிடர் கார் கூட இல்லை என்பது கூடுதல் வேட்புமனு மூலம் தெரியவந்தது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் டிஆர்எஸ் கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 32 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

4 மந்திரங்கள்

4 மந்திரங்கள்

எனவே இக்கட்சியின் வெற்றி உறுதியானது என்பது தெளிவாகிறது. அப்படி வாக்காளர்களை கவர சந்திரசேகர ராவ் என்னதான் செய்தார் என்பதை பார்த்தால் வெறும் 4 விஷயங்கள்தானாம். அதற்கே மக்கள் வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர். அதாவது பணம், திருமணம், வீடுகள், தண்ணீர் ஆகிய 4 மந்திரங்கள்தான் அவை.

ஆதரவு விலை

ஆதரவு விலை

மக்கள் திருப்தியாக வாழ்வதற்கு பணம், திருமணம், வீடு மற்றும் தண்ணீர் ஆகியவைதான் பிரதானம் என்பதை கேசிஆர் உணர்ந்தார். அதை விவசாயிகளிடம் இருந்து தொடங்கினார். நாடு முழுவதும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை, மறைமுக மானியம் உள்ளிட்ட பழைய முறைகளை கைவிட்டார்.

பேருதவி

பேருதவி

அதற்கு பதிலாக ஆண்டுக்கு ரபி மற்றும் காரிப் பருவங்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ. 4000 ஆயிரம் வழங்குகிறார். அப்படியெனில் 5 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சுளையாக ரூ. 40ஆயிரம் கிடைக்கும். இது விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

பெண்களுக்கு நிதி

பெண்களுக்கு நிதி

அதுபோல் பெண் குழந்தைகளின் திருமணத்துக்காக சந்திரசேகர ராவ் ஒரு திட்டத்தை உருவாக்கினார். அதுதான் கல்யாண் லட்சுமி அல்லது ஷாதி முபாரக் (முஸ்லிம் குடும்பங்களுக்கு). இந்த திட்டத்தின் மூலம் ரூ. 1 லட்சத்தை நிதியாக தருகிறார்.

வீடு

வீடு

அடுத்ததாக வீட்டில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், விதவைகள் இருந்தால் அவர்களுக்கு நேரடி ஓய்வூதியங்களை வழங்கினார். இது போல் வீட்டுக்கு ஒருவர் இருப்பர். அடுத்தது தங்குவதற்கு வீடு. ஏழைகளுக்கு இரு படுக்கை அறை கொண்ட வீடுகளை வழங்குவதற்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளார்.

தேர்தல் வெற்றி

தேர்தல் வெற்றி

அந்த வீடுகளுக்கு தண்ணீர், சுகாதாரம், 24 மணி நேர மின் இணைப்பு ஆகியன வழங்கப்படும். இது போன்ற திட்டங்களால் கேசிஆர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது.

English summary
There are four reasons of the victory of KCR and the TRS in the Telangana assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X