ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெட் கலர் கார்.. ஆசை ஆசையாக உள்ளே ஏறிய 3 பெண் குழந்தைகள்.. சடாரென மூடிய கதவு.. கொடுமை!

கார் கதவு மூடிக் கொண்டதால் 3 சிறுமிகள் உயிரிழந்தனர்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ரெட் கலர் காரை பார்த்ததுமே 3 பெண் குழந்தைகளுக்கு ஆசை வந்துவிட்டது.. ஆசை ஆசையாக உள்ளே ஏறி கொண்டதும், அந்த கார் கதவு தானாகவே மூடிக் கொண்டதில், குழந்தைகள் மூச்சு திணறி திணறியே உயிரை விட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே, காருக்குள் விளையாடிய 2 குழந்தைகள், மூடிய கதவை திறக்க முடியாமல் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் 10 நாளைக்கு முன்பு நடந்தது.. அதுபோலவே இப்போது ஒரு கொடுமை ஆந்திராவில் நடந்துள்ளது.

 three girls die suffocation after getting locked inside car in andhra pradsh

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் ரெமல்லே என்ற கிராமம் உள்ளது.. இங்கு ஒரு சிவப்பு கலர் கார் நிறுத்தப்பட்டிருந்தது.. அந்த காருக்குள் அஸ்பனா, யாஸ்மின் மற்றும் பர்வீன் என்ற 3 சிறுமிகள் விளையாடுவதற்காக ஏறியுள்ளனர்.. ஆனால் அந்த கார் கதவு தானாகவே மூடி கொண்டுள்ளது.

உள்ளே மாட்டிக் கொண்ட சிறுமிகளால் வெளியே வர முடியவில்லை.. அவர்கள் கத்தியதும் யாருக்கும் கேட்கவும் இல்லை.. இதனால் மூச்சு திணறி திணறியே அந்த குழந்தைகள் இறந்துள்ளன... இந்த குழந்தைகளுக்கு 6 முதல் 8 வயது வரைதான் இருக்குமாம்.. அஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இவர்கள்.

வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்திருக்கிறார்கள்.. ரெட் கலர் காரை பார்த்ததும் அதனுள் ஏறி உட்கார்ந்து விளையாட ஆசை வந்துள்ளது.. அதனால் உள்ளே ஏறியதுமே ஆட்டோமெட்டிக் கதவு மூடி கொண்டுள்ளது.. விளையாட போன பிள்ளைகளை காணோம் என்று பெற்றோர் தேடி வந்தபிறகுதான் காருக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது.

எப்படி வந்தது? யார் போட்டது?.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த எப்படி வந்தது? யார் போட்டது?.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த "அந்த" பொருள்

உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து குழந்தைகளை வெளியே எடுத்தனர்.. பிறகு அவர்கள் இறந்துவிட்டதாக பெற்றோர்களிடம் போலீசார் சொன்னார்கள்.. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த 3 குழந்தைகளின் பெற்றோர்களும் குழந்தைகளை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றும் பிரயோஜனம் இல்லை.. அந்த சடலங்களை கட்டிப்பிடித்து கொண்டு பெற்றோர்களும், உறவினர்களும் அழுதது காண்போரை கலங்க வைத்தது.

கடைசி நேரத்தில் உயிருக்கு போராடியபோது, அந்த கதவுகளை திறக்க சிறுமிகள் போராடிய தடயங்களும் உள்ளதாக போலீசார் கூறுகிறார்கள். இதனிடையே அந்த காரின் ஓனர், கதவுகளை மூடவில்லை என்று போலீசாரிடம் கூறியுள்ளார். எதிர்பாராதவிதமாக தானாகவே மூடிக்கொண்ட காரில் 3 சிறுமிகள் மூச்சு முட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
three girls die suffocation after getting locked inside car in andhra pradsh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X