ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓடும்போதே தீ பற்றி எரிந்த ரயில் பெட்டி.. துரிதமாக செயல்பட்ட பணியாளர்.. பலநூறு பேரை காப்பாற்றினார்!

ஆந்திராவில் ஓடும்போதே தீ பற்றி எரிந்த ரயில் பெட்டியால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவில் ஓடும்போதே தீ பற்றி எரிந்த ரயில் பெட்டியால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ரயில்வே பணியாளர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு பெரிய அசம்பாவிதத்தை தடுத்து இருக்கிறார்.

கர்நாடகாவின் பெங்களூர் யஷ்வந்த்பூரில் இருந்து ஜார்கண்ட்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் நோக்கி அந்த ரயில் சென்று இருக்கிறது. ஆந்திர அருகே செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அந்த ரயிலில் பல நூறு பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். நேற்று இரவும் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

தீ பிடித்தது

தீ பிடித்தது

அந்த ரயில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் போதே, அதில் உள்ள சமையல் செய்யும் பேன்ட்ரி ரயில் பெட்டியில் தீ பிடித்துள்ளது. வேகமாக அந்த பெட்டி முழுக்க பரவிய தீ, கொளுந்துவிட்டு எரிய தொடங்கி உள்ளது.

முடியவில்லை

இதையடுத்து ரயில்வே பணியாளர்கள் வேகமாக அங்கு வந்து தீயை அணைக்க முயன்று இருக்கிறார்கள். 10 நிமிடம் கஷ்டப்பட்டு தீயை அணைக்க முயன்று உள்ளனர். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை.

என்ன செய்தனர்

இதையடுத்து, ரயில் பெட்டியை கழற்றி விட முடிவெடுத்துள்ளனர். அதன்படி அந்த தீ பிடித்த ரயில் பெட்டியை மட்டும், ரயிலில் இருந்து கழற்றிவிட்டனர். மற்ற பெட்டிகளுக்கு தீ பரவ கூடாது என்பதால் துரிதமாக செயல்பட்டு இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

மோசம்

இதனால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதனால் பெங்களூர், ஆந்திராவில் இன்று காலையில் இருந்து பல ரயில்கள் காலதாமதாக செல்கிறது.

English summary
Trains' Pantry coach catches fire in Andhra: This how workers saved people from the fire accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X