ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆய் கழுவி.. ஷேவ், கட்டிங் செய்து.. என்னென்னலாம் செய்து வென்றுள்ளது டிஆர்எஸ் பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    தெலுங்கானாவில் அதிக இடங்களில் முன்னிலை பெரும் டிஆர்எஸ் - வீடியோ

    ஹைதராபாத்: தெலுங்கானாவில் சட்டசபை தேர்தலின் போது கட்சி தொண்டர்களும் வேட்பாளர்களும் செய்த அலப்பறை இருக்கே அப்பப்பா.. இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

    தெலுங்கானாவில் மட்டும் இல்லை. மற்ற மாநிலங்களில் கூட அருவருக்கத்தக்க செயல்களில் சிறிதும் கூச்சம் இல்லாமல் வேட்பாளர்கள் இறங்கிவிட்டனர். சரி தெலுங்கானாவில் நடந்த கூத்துகளை நினைவுக்கூர்வோம்.

    தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பெட்டி நிறைய செருப்புகளும், ராஜினாமா கடித நகல்களையும் கொண்டு வந்தார். அப்போது அங்கிருந்த வேட்பாளர்களிடம் ஒரு ஜோடி செருப்புகளையும் ராஜினாமா கடித நகல்களையும் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

    வாக்கு சேகரிப்பு

    வாக்கு சேகரிப்பு

    இதை பார்த்த வாக்காளர்கள் சற்றே ஆடி போய்விட்டனர். சரி சுயேச்சை வேட்பாளர்தான் இப்படி என்றால், மாநில ஆளும் கட்சியினர் செய்ததோ தாங்க முடியல. தெலுங்கானாவில் ராஷ்ட்டீரிய சமிதி வேட்பாளர் ஒருவர் தொகுதியில் வாக்கு சேகரித்த போது ஒரு சலூன் கடைக்கு சென்றார்.

    வேட்பாளருக்கு

    வேட்பாளருக்கு

    அங்கு இருந்தவருக்கு கட்டிங், ஷேவிங் செய்து வாக்கு சேகரித்தார். இதனால் அந்த மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர். இதையடுத்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சதுப்பள்ளி தொகுதி வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்றார்.

    வீடியோ வைரல்

    வீடியோ வைரல்

    அப்போது அந்த வழியில் ஒரு குழந்தை திறந்தவெளியில் மலம் கழித்தது. இதை பார்த்த அந்த வேட்பாளரோ ஓடிபோய் பாப்பாவுக்கு கால் கழுவிவிட்டார். குழந்தையின் தாயிடம் தண்ணீர் கேட்டு கை வைத்து கழுவிவிட்டார். இது தொடர்பான வீடியோ வைரல் ஆனது.

    வெற்றி

    வெற்றி

    இத்தகைய அலப்பறைகளுக்கு மத்தியில் இன்று தெலுங்கானா உள்பட 5 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி அபார வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

    வெற்றி பாதை

    வெற்றி பாதை

    குழந்தைக்கு கால் கழுவிவிட்டது, கட்டிங், ஷேவிங் செய்து விட்டதை பார்த்து என்னதான் எதிர்க்கட்சியினரும் மக்களும் சிரித்தாலும் இதை வெட்கப்படாமல் செய்து டிஆர்எஸ் கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுவிட்டனர் இந்த வேட்பாளர்கள்.

    English summary
    Telangana Election Results 2018: TRS party going to get historic win.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X