ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல்: படுகேவலமாக மண்ணைக் கவ்விய பாஜக!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: லோக்சபா தேர்தலில் காவி கொடியை பறக்கவிட்ட பாஜக, தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தலில் மிக மோசமாக மண்ணைக் கவ்வியுள்ளது.

கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனால் தென் மாநில்ங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றலாம் என்கிற நிலைமை இருந்தது.

TRS sweeps in Telangana local body polls

ஆனால் லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு கர்நாடகா, தெலுங்கானாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அப்படியெல்லாம் ஆசைப்பட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த இரு மாநில்ங்களிலுமே பாஜகவை மக்கள் அடியோடு நிராகரித்திருக்கின்றனர்.

நீட் தேர்வு: தென்னகத்தில் ஆந்திராவில்தான் அதிக தேர்ச்சி!நீட் தேர்வு: தென்னகத்தில் ஆந்திராவில்தான் அதிக தேர்ச்சி!

தெலுங்கானாவில் 32 மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தலில் அத்தனையையும் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே அள்ளியிருக்கிறது. மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 538, இதில் ஆளும் டி.ஆர்.எஸ். 449, காங்கிரஸ் 75 இடங்களை கைப்பற்றிவிட்டன. பாஜகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தன.

ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எண்ணிக்கை 5,816. இதில் 3,557 இடங்களை டிஆர்எஸ், 1377 இடங்களை காங்கிரஸ் அள்ளியிருக்கின்றன. இதில் பாஜகவுக்கு 211தான் கிடைத்திருக்கிறது.

இதுவும் மக்கள் மக்கள் மனநிலை!

English summary
Ruling TRS party swept the local body elections in Telangana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X