• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வயசு பெண்களை.. நிர்வாணமாக்கி.. ஒருவர் பூஜை ரூமில்.. இன்னொருவர் மாடியில்.. அலறிப்போன சித்தூர்

|

ஹைதராபாத்: 2 மகள்களையும் பெற்றோரே நிர்வாணமாக்கி உள்ளனர்.. முதல் மகளை பூஜை ரூமில் வைத்து கொன்றுள்ளனர்.. இரண்டாவது மகளை ஈட்டி எடுத்து பலமுறை குத்தியே கொன்றுள்ளனர்.. ஆந்திர மாநிலத்தில் நடந்த இந்த இரு நரபலி சம்பவத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி மக்களை உறைய வைத்து வருகின்றன.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. மல்லுரு புருஷோத்தன் நாயுடு - பத்மஜா தம்பதிகள்தான் இப்படி ஒரு கொடூர காரியத்தை செய்துள்ளனர்..

புருஷோத்தமன், பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார்.. பத்மஜா சொந்தமாகவே ஒரு காலேஜ் நடத்தி வருகிறார்.. அதற்கு இவர்தான் பேராசிரியர். அலெக்யா என்ற 27 வயது, சாய் திவ்யா என்ற 22 வயது மகள்கள் உள்ளனர்.

படிப்பு

படிப்பு

ஒட்டுமொத்த குடும்பமே கல்வியில் சளைத்தவர்கள் இல்லை.. அதேபோல, செல்வத்திலும் குறைந்தவர்கள் இல்லை.. இவ்வளவு இருந்தும், இன்னும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளனர் புருஷோத்தமன் தம்பதியினர். ஏற்கனவே இந்த தம்பதிகள் மாந்திரீக விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருபவர்களாம்.. இதற்காகவே பல வருடம் பல பூஜைகளை செய்தும் வந்துள்ளனர்.. மேலும் பணத்தாசை பிடித்து ஆட்ட, கடைசியில் தங்கள் வயசுக்கு வந்த இரு மகள்களையும் நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

மந்திரவாதி

மந்திரவாதி

இரண்டு பெண்களையும் நரபலி தந்தால், ஏழேழு ஜென்மத்துக்கும் குடும்பத்தில் செல்வம் புரளும் என்று யாரோ ஒரு மந்திரவாதி சொன்னாராம்.. அதைநம்பி தம்பதி இருவரும் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.. மகள்களை நரபலி தருவதற்கு நாளையும் குறித்தனர்.. சம்பவத்தன்று இரவு நரபலி பூஜையும் நடத்தப்பட்டது.. அப்போதுதான் அந்தஅலறல் சத்தம் வீல் என அந்தஊரையே நடுநடுங்க வைத்தது..

அலறல்

அலறல்

தூங்கி கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் எல்லாம் விழுந்தடித்து கொண்டு புருஷோத்தமன் வீட்டிற்கு முன்பாக கூடிவிட்டனர்.. கதவை எத்தனை முறை தட்டினாலும், புருஷோத்தமன் திறக்கவே இல்லை.. அதனால் மக்கள், வாசற்படியில் இருந்தே கத்தி கூச்சலிட்டனர். உள்ளே என்ன நடக்கிறது? யாருக்கு என்ன ஆனது? என்று சத்தமாக கேட்டனர்.. அப்போதும் ஒரு பதிலும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அதற்கு பிறகுதான் போலீசுக்கு சென்றிருக்கிறார்கள்...

சித்தூர்

சித்தூர்

சித்தூர் ஸ்டேஷனில் புகார் தரவும், போலீசாரும் விரைந்து வந்தனர்.. அவர்களும் பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. வேறு வழியின்றி கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.. அங்கே அலெக்யாவும், சாய் திவ்யாவும் 2 பேருமே நிர்வாண நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு உறைந்து போய்விட்டனர்.. ஆனால், தம்பதியினரும், அந்த மந்திரவாதியும், ஒரு சலனமும் இல்லாமல், ஒரு டென்ஷனும் இல்லாமல் தொடர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தனர்.

 மந்திரவாதி

மந்திரவாதி

இதை பார்த்ததுமே போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றபோது "கொஞ்சம் பொறுமையாக இருங்க சார்.. 2 பொண்ணுங்களும் இப்போ உயிரோடு வந்திடுவாங்க" என்று சொல்லி ஷாக் தந்துள்ளனர். இதற்கு பிறகுதான், விஷயத்தை கேள்விப்பட்டு, மாவட்ட டிஎஸ்பி ரவி மனோகராச்சாரி விரைந்து வந்தார்.. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் 2 மகள்களின் சடலங்களை போஸ்ட் மார்ட்டத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. மந்திரவாதி, தம்பதி என 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கொலை

கொலை

இதுகுறித்து டிஎஸ்பி சொல்லும்போது, இந்த வீட்டில் 3 நாட்களாகவே இது சம்பந்தமாக பூஜை செய்து வந்திருக்கிறார்கள்.. ஆனால், ஞாயிற்றுக்கிழமைதான் நரபலிக்கு நாள் குறித்திருந்தனர்.. நடுசாம பூஜை முடிந்ததும், முதலில் மூத்த மகள் அலெக்யாவை பூஜை ரூமிலேயே வைத்து கொன்றுள்ளனர்.. அதற்கு பிறகு, ஒரு சின்ன செப்பு டம்ளர் எடுத்து, அந்த பெண்ணின் வாயை அடைத்து, அதற்கு பிறகு உடற்பயிற்சி செய்யும் தம்பிள்ஸ் வைத்து தலையை அடித்து கொலை செய்துள்ளனர்.

ஈட்டி

ஈட்டி

அந்த உயிர் பிரிந்த பிறகுதான், 2வது மகள் சாய் திவ்யாவை வீட்டின் முதல் மாடியில் உள்ள ரூமுக்கு அழைத்து சென்று, ஒரு கூர்மையான ஈட்டியை எடுத்து பல முறை குத்தி குத்தியே கொலை செய்துள்ளனர் என்றார்... இந்த மூத்த மகள் அலெக்யா, இந்திய வன சேவை தேர்வில் தேர்ச்சி பெற்றவராம்.. போன வருஷம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் வன அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.. ஆனால் லாக்டவுன் வந்துவிடவும், லீவு எடுத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.. அப்போதுகூட வீட்டில் சும்மா இல்லையாம்.. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்..

படிப்பு

படிப்பு

அதேபோல், பெரிய பொண்ணு, சாய் திவ்யாவும் எம்பிஏ முதுகலைப் படிப்பை முடித்துள்ளார்.. சென்னை மியூசிக் அகாடமியில் இசைப் படிப்பை தொடங்கி உள்ளாராம். இவ்வளவு அழகான, அறிவான, திறமையான மகள்களை, ஈவிரக்கமில்லாமல் கொன்று போட்டதற்கு இந்த பெற்றோருக்கு எப்படி மனசு வந்திருக்கும்? படிச்ச படிப்பு எல்லாம் வெறும் ஏட்டளவில்தானா? கொஞ்சம்கூட பகுத்தறிவும், சுயசிந்தனையும் இல்லையா? தன் வயிற்றில் பிறந்த 2 குழந்தைகளையே கொன்றுவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தை வைத்து கொண்டு இந்த தம்பதி என்னதான் செய்ய போகிறார்கள?! யாருக்காக வாழ போகிறார்கள்? அப்படி என்ன வாரிக் கொண்டு போக போகிறார்கள்?!

English summary
Two daughters nude and killed by parents in Andhra Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X