• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ராத்திரியானாலும் சரி.. அங்கேயே இருங்க.. யாரும் கிளம்பி போகக் கூடாது.. ஜெ. பாணியில் ஜெகன்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: "நைட் ஆனாலும் சரி.. எல்லாரும் அங்கேயே தங்குங்க.. யாரும் கிளம்பி போக கூடாது" என்று தன் மாநில அமைச்சர்களுக்கு கண்டிப்பு உத்தரவுகளை போட்டு உள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.. விஷவாயுவினால் பாதிக்கப்பட்டவர்களை தனியே விட்டுவிட்டு, அங்கிங்கெங்கும் நகர கூடாது என்றும் ஸ்டிரிக்ட் உத்தரவு போட்டுள்ளாராம்.

  Jagan Mohan Reddy tells ministers to spend night in villages

  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே பல அதிரடிகளை காட்டி வருகிறார்.. இவரது அப்பா இறந்து வருஷம் ஆனாலும், கடுமையான உழைப்புக்கு பிறகுதான் இவருக்கு முதல்வர் பதவி வந்து சேர்ந்துள்ளது.

  முதல் கையெழுத்தே முதியோர் நலனுக்கானதுதான்... அதாவது உதவித்தொகை 1,500 ரூபாயில் இருந்து 2,300 ரூபாய் அதிகரித்து மக்களின் அபார பாராட்டை பெற்றவர்.. பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் ஏழை அம்மாவுக்கு ஆண்டுக்கு ரூ.15000 என்று அசர வைத்தவர்.

  மே 6ல் நடந்த திருப்பம்.. சென்னையை விட கவலையளிக்கும் அரியலூர்.. கொரோனா பரவலின் புதிய எபிசென்டர்!மே 6ல் நடந்த திருப்பம்.. சென்னையை விட கவலையளிக்கும் அரியலூர்.. கொரோனா பரவலின் புதிய எபிசென்டர்!

  இளைஞர்கள்

  இளைஞர்கள்

  ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றி வியக்க வைத்தவர்.. தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகளையும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்.. பாலியல் வன்கொடுமைக்கு 3 வாரத்தில் தூக்கு என அதிர வைத்தவர்.. ஆந்திராவில் இன்னும் 3 மாசத்துல லஞ்சம் என்பதே இருக்கக்கூடாது என்று மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவை பிறப்பித்து அப்ளாஸ் அள்ளியவர்.. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கினால் 3 வருஷம் ஜெயில், யாராவது லஞ்சம் வாங்கினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க என்று ஒரு நம்பரை தந்து மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

  நிதியுதவி

  நிதியுதவி

  யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.. விசாகப்பட்டின விஷவாயு மாநிலத்தையே புரட்டி போட்டுவிட்டது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.. விஷயத்தை கேள்விப்பட்டதும் நேரடியாகவே ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னார்.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் என்றும் அறிவித்தார்.

  5 கிராமங்கள்

  5 கிராமங்கள்

  இந்த சம்பவத்திற்கு பிறகு எல்ஜி ரசாயன ஆலையை சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர்... இப்போது அவர்களில் பலர் சற்று சீராக இருப்பதால் ஒவ்வொருவராக தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.. ஆனால் பாதிப்பின் எச்சங்கள் இருக்கலாம் என்பதால், ஏசி, கிச்சன், திறந்த வெளி நீர், போன்வற்றை வல்லுனர் குழு ஒப்புதல் அளிக்கும்வரை பயன்படுத்த வேண்டாம் என்று அம்மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  ஜெ.பாணி

  ஜெ.பாணி

  முகாம்களில் இருந்தவர்கள், சீராகி தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டார்களே என்று ஜெகன்மோகன் அத்துடன் விடவில்லை.. அமைச்சர்களை அழைத்து பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலேயே இரவு நேரங்களில் தங்கி இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.. அம்மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை பார்த்து உடனுக்குடன் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம்.. இதிலும் அதே ஜெ.பாணிதான்!! அதனால்தான் தொடர்ந்து மக்கள் மனதில் நெருங்கியே இருக்கிறார் ஜெகன்!!

  English summary
  vizag gas leak: cm jagan reddy tells ministers to spend night in villages hit by gas leak incident
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X