ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 மாதத்தில் இருந்து 1 வருடத்துக்குள் ஆந்திராவையே மாற்றுவேன்.. ஜெகன் மோகன் ரெட்டி உறுதி!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: 6 மாதத்தில் இருந்து ஓராண்டுக்குள் ஆந்திராவையே மாற்றிக்காட்டுவேன் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இரு தேர்தல்களிலுமே முன்னிலை பெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக

25லும் அவுட்

25லும் அவுட்

பிற்பகல் வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 24 இடங்களிலும் சந்திரபாபு நாயுடுவின் டிடிபி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வந்தது. ஆனால் பிற்பகலுக்கு பிறகு அந்த ஒரு இடமும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வசம் சென்றது. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதியிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது.

செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

145 இடங்களில் முன்னிலை

145 இடங்களில் முன்னிலை

இதேபோல் 175 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 145 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 29 சட்டப்பேரவை தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஒய்எஸ்ஆர் காங். வெற்றி

ஒய்எஸ்ஆர் காங். வெற்றி

ஜன சேனா கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. 145 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதால் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

ஓட்டுக்கு பணம் தராமல் 'நாம் தமிழர்' வாங்கிய ஓட்டுகள்- பகல் 2.30 மணி நிலவரம்! ஓட்டுக்கு பணம் தராமல் 'நாம் தமிழர்' வாங்கிய ஓட்டுகள்- பகல் 2.30 மணி நிலவரம்!

முதல்வராக பதவியேற்பு

முதல்வராக பதவியேற்பு

ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30ஆம் தேதி ஆந்திர முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினமே அவரது அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

ஜெகன் நன்றி

ஜெகன் நன்றி

இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

ராமதாஸையும், பாமகவையும் வன்னியர் சமுதாயம் கை விட்டு விட்டதா..தோல்வி தரும் பாடம் ராமதாஸையும், பாமகவையும் வன்னியர் சமுதாயம் கை விட்டு விட்டதா..தோல்வி தரும் பாடம்

ஆந்திராவையே மாற்றுவோம்

ஆந்திராவையே மாற்றுவோம்

மேலும் ஆந்திராவில் 6 மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாங்கள் பெற்ற வெற்றி மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

English summary
YSRC Jagan Mohan Ready has said we will change the state within a year. Jagan says thanks to people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X