ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமா.. 50-50-ன்னா என்னா? மார்க்கெட்ல ஏதாவது புது பிஸ்கெட் விட்டுருக்காங்களா? சிவசேனாவை வாரும் ஓவைசி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆமா 50-50 என்றால் என்ன, ஏதாவது புது வகையான பிஸ்கெட்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார்களா என மகாராஷ்டிரத்தில் சிவசேனா- பாஜக மோதல் குறித்து மஜ்லிஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கிண்டல் செய்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்தது. இதில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றது.

பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படுகிறது. இதை எந்த ஒரு கட்சியும் தனித்து பெறவில்லை. இதனால் பாஜக-சிவசேனா ஏற்கெனவே கூட்டணி அமைத்ததாலும் இருவரது எண்ணிக்கையும் பெரும்பான்மையை தாண்டுவதாலும் அவை ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கர்நாடகாவில் புயலை கிளப்பிய எடியூரப்பா ஆடியோ- ஆட்சியை கலைக்க காங். வலியுறுத்தல்!கர்நாடகாவில் புயலை கிளப்பிய எடியூரப்பா ஆடியோ- ஆட்சியை கலைக்க காங். வலியுறுத்தல்!

50-50

50-50

ஆனால் முதலில் இரண்டரை ஆண்டுகள் நாங்கள் முதல்வராகவும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் பாஜக முதல்வராகவும் இருக்க வேண்டும் என கூட்டணி முன்னர் பேசியபடி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

குடியரசு தலைவர் ஆட்சி

குடியரசு தலைவர் ஆட்சி

ஆனால் பாஜகவோ அது போல் எந்த ஒரு உத்தரவாதத்தையும் நாங்கள் தரவில்லை என்கிறது. இன்னும் 7-ஆம் தேதிக்குள் அங்கு ஆட்சி அமைக்காவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க நேரிடும் சூழல் உள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இதனால் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி, முக்கிய இலாகாக்கள் வழங்கி அதை சமாதானம் செய்ய பாஜக முயற்சிக்கிறது. ஆனால் சிவசேனாவோ இதுதான் சாக்கு என எண்ணி இறங்கி வர மறுக்கிறது. இந்த மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிவசேனாவுக்கு ஆதரவு அளித்து பாஜக அல்லாத ஆட்சியை ஏற்படுத்த காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் முயற்சிக்கிறது.

மக்களுக்கு நன்மை

மக்களுக்கு நன்மை

இந்த நிலையில் இதுகுறித்து ஹைதரபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மஜ்லிஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசி கூறுகையில் 50-50 என்றால் என்ன? ஏதாவது புதிய பிஸ்கெட்டை மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா? மகாராஷ்டிர மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள். இருவரும் சேர்ந்து இதுவரை என்ன செய்துள்ளீர்கள்.

விவசாயிகள் குறித்து கவலையில்லை

விவசாயிகள் குறித்து கவலையில்லை

பாஜக மற்றும் சிவசேனாவுக்கு சதாராவில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த கவலையும் இல்லை. விவசாயிகள் எல்லாம் கவலையில் உள்ளனர். ஆனால் இவர்களோ 50-50 குறித்து பேசி வருகின்றனர் என தெரிவித்தார்.

English summary
AIMIM chief Asaduddin Owaisi asks What is 50-50? Any new biscuit introduced in market?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X