ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்கள் மொத்த சந்ததியும் அழிந்து போகலாம்.. ஒரு நாளும் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது.. ஓவைசி ஆவேசம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: உங்கள் மொத்த சந்ததிகள் வேண்டுமானாலும் அழிந்து போகாலாம். ஆனால் ஒரு நாளும் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது என்று அசாதுதீன் ஓவைசி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடக்கிறது. இதில் பொதுவாக ஆளும் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தான் போட்டி இருக்கும்.

ஆனால் ஒருங்கிணைந்த ஆந்திரா, ஆந்திரா தெலுங்கானா என இரு மாநிலமாக பிரிந்த பின்னர், காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவு ஏற்பட்டது ஆந்திராவில் ஜெகனின் பின்னால் காங்கிரசார் சென்றுவிட்டார். தெலுங்கானாவில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்த போதும் அசுர பலத்துடன் டிஆர்எஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.

கொரோனா வைரஸ்.. 2019 கோடைக்காலத்தில் இந்தியாவில் தோன்றியதாக சீனா சர்ச்சை கருத்து!கொரோனா வைரஸ்.. 2019 கோடைக்காலத்தில் இந்தியாவில் தோன்றியதாக சீனா சர்ச்சை கருத்து!

பாஜக- டிஆர்எஸ்

பாஜக- டிஆர்எஸ்

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக பாஜக நான்கு இடங்களில் வென்று அசத்தியது. அத்துடன் துபக் சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்றும் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த உற்சாகத்தால் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் அசுர பலத்துடன் பாஜக குதித்துள்ளது. இப்போது தெலுங்கானாவில் டிஆர்எஸ் மற்றும் பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

முஸ்லீம்கள்

முஸ்லீம்கள்

ஹைதராபாத் மாநகரம் முஸ்லீம்கள் அதிக அளவு வாழும் பகுதியாகும். நிஜாமின் கோட்டையான ஹைதராபாத்தை கைப்பற்ற முடியும் என்று பாஜக ஆழமாக நம்புகிறது இதன் அடிப்படையில் பாஜக தேசிய தலைவர்கள் ஹைதராபாத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வார்டு வாரிய, தெருவாரியாக வியூகம் அமைத்து பாஜக ஆளும் கட்சியை அதிர வைத்துள்ளது.

ஹைதராபாத் பெயர்

ஹைதராபாத் பெயர்

இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஹைதராபாத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,. அப்போது அவர் பேசுகையில், ஹைதராபாத் என்ற பெயர் பாக்யாநகர் என்று பாஜக வென்றால் மாற்றப்படும் என்று கூறினார். இதை கேட்டு ஏஐஎம்எம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கொதித்து போனார். அவர் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

மாற்ற முடியாது

மாற்ற முடியாது

பெயரை மாற்ற விரும்புபவர்களின் மொத்த சந்ததியோ ஒரு நாள் அழிந்து போகலாம். ஆனால் ஒரு நாளும் ஹைதராபாத் என்ற பெயரை மாற்ற முடியாது என்று ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். "நான் உங்களுக்கு [வாக்காளர்களிடம்] சொல்கிறேன், நகரத்தின் [ஹைதராபாத்] பெயரை மாற்ற விரும்பும் நபர்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் ஓவைசி கூறினார்.

English summary
AIMIM chief Asaduddin Owaisi attacked Uttar Pradesh Chief Minister Yogi Adityanath after he pitched for changing the name of Hyderabad to Bhagyanagar at an election rally in the city on Saturday. Asaduddin Owaisi the entire generation of those who want to rename Hyderabad will end but the city's name will not be change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X