லேடீஸ் ஹாஸ்டல் ரூமில்.. கட்டிலுக்கு அடியில் ஒரு நாள் முழுதும்.. அதிர வைத்த இளைஞர்.. ஷாக் வீடியோ!
ஹைதராபாத்: லேடீஸ் ஹாஸ்டல் ரூமில்.. அறையில் கட்டிலுக்கு அடியில் ஒருநாள் முழுக்க பதுங்கி இருந்த இளைஞரை மொத்த பேரும் சேர்ந்து கையும் - களவுமாக பிடித்துவிட்டனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நுஜிவிடு பகுதியில் ராஜீவ்காந்தி யுனிவர்சிட்டி ஆஃப் நாலெட்ஜ் டெக்னாலஜிஸ் என்ற யூனிவர்சிட்டி ஒன்று செயல்பட்டு வருகிறது.. மிகவும் ஃபேமஸான பல்கலைக்கழகம் இது.
கிட்டதட்ட 6 ஆயிரம் மாணவ - மாணவிகள் இங்கு படித்து வருகிறார்கள். இதற்கெனெ தனியாக ஹாஸ்டலும் இயங்கி வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள மாணவியர் விடுதியில் குறிப்பிட்ட ஒரு மாணவியின் ரூமுக்கு மட்டும் ஒரு மாணவன் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.. இதை அநத் மாணவியின் தோழியர் கவனித்துள்ளனர்.

எச்சரிக்கை
அதனால் அந்த மாணவனை கூப்பிட்டு பலமுறை எச்சரித்துத்துள்ளனர்.. வரக்கூடாது என்று சொல்லியும் அந்த மாணவன் கேட்கவில்லை.. தோழியிடம் சொல்லியும் அவரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.. அந்த மாணவர் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட ரூமுக்குள்ளேயே போய் வந்து கொண்டிருந்தார்.. இதனால் அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டம் ஹாஸ்டல் மாணவிகள் திட்டம் தீட்டினர்.

செக்யூரிட்டிகள்
வெள்ளிக்கிழமை சாயங்காலம் அந்த மாணவர் அதே ரூமுக்குள் நுழைந்தார்... உடனே எல்லா மாணவிகளும் ஒன்றுதிரண்டு, அந்த ரூமின் கதவை வெளியே பூட்டு போட்டு பூட்டி போய்விட்டனர்... பிறகு ஹாஸ்டல் வார்டன் மற்றும் செக்யூரிட்டிகளுக்கு தகவல் தந்தனர். செக்யூரிட்டிகள் விரைந்து வந்து கதவை தந்து உள்ளே பார்த்தால், அங்கு யாருமே இல்லை.. அந்த தோழி மட்டும் உள்ளே நின்று கொண்டிருந்தார்.

விசாரணை
எனினும் பாதுகாவலர்கள் விடுவதாக இல்லை. திடீரென அங்கிருந்த எல்லா கட்டில்களையும் தூக்கி பார்த்தனர்.. அப்போதுதான் ஒரு கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒளிந்து படுத்து கொண்டிருந்தார்.. அவரை லபக்கென தூக்கி வந்த செக்யூரிட்டிகள் விசாரணை நடத்தினர்... அந்த மாணவன், மாணவி 2 பேரின் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர்.

வீடியோ
மாணவியின் அறைக்கு இவர் ஏன் சென்றார் என்ற விசாரணை பல்கலைக்கழக நிர்வாகம் நடத்தி வருகிறது.. ஆனால் கட்டிலுக்கு அடியில் வசமாக சிக்கிய இந்த சம்பவத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. இந்த வீடியோவை வெளியிட்டது என்று யார் என்றும் ஹாஸ்டலில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடக்கிறது.