For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழில்முனைவோருக்கு வரப்பிரசாதம்.. InstaBIZ சேவை தளத்தை அறிமுகப்படுத்திய ஐசிஐசிஐ.. என்ன சிறப்பு?

சிறு மற்றும் குறு தொழில் பார்க்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் சுய தொழில் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக ஐசிஐசிஐ வங்கி புதிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளத்தை உருவாக்கி இருக்கிறது.

Recommended Video

    தொழில்முனைவோருக்கு வரப்பிரசாதம்.. InstaBIZ சேவை தளத்தை அறிமுகப்படுத்திய ஐசிஐசிஐ.. என்ன சிறப்பு?-வீடியோ

    சென்னை: சிறு மற்றும் குறு தொழில் பார்க்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் சுய தொழில் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக ஐசிஐசிஐ வங்கி புதிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளத்தை உருவாக்கி இருக்கிறது. இன்ஸ்டாபிஸ் (InstaBIZ) என்று அழைக்கப்படும் இந்த தளம் மூலம் 115க்கும் அதிகமான பொருட்களையும், சேவைகளையும் எளிதாக மொபைல் மூலமும், இணைய பரிவர்த்தனை மூலமும் செய்ய முடியும்.

    இந்தியாவில் தொடங்கப்படும் புதிய சேவைகள் எல்லாம் இதில் உடனடியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் மூலம் தொழில்முனைவோர்கள் எளிதாக வங்கிக்கு செல்லாமலே மொபைல் மூலமே அனைத்து விதமான சேவைகளையும், பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும்.

    ICICI Bank launches ‘InstaBIZ’ for MSMEs: The very first comprehensive digital banking platform

    இதன் மூலம் சேவைகளையும், வியாபாரத்தையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது மிகவும் எளிதாகிறது. முதல்முறை இப்படி ஒரு சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது அதிக தொகையை (15 லட்சம் வரை), பல்வேறு டிஜிட்டல் தளங்கள் மூலம் டிரான்ஸ்பர் செய்ய முடியும். இதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பண பரிவர்த்தனைகளை எளிதாக நேர்மையான முறையில் செய்ய முடியும்.

    இந்த டிஜிட்டல் தளம் மட்டுமே உடனடியாக செல்லான் நம்பர் மூலம் ஜிஎஸ்டியை உடனடியாக கொண்டு வருகிறது. அதேபோல் பாயிண்ட் ஆப் சேல் மற்றும் இன்ஸ்டன்ட் மரைன் இன்சூரன்ஸ் பாலிசி இரண்டிலும் இதன் மூலம் எளிதாக விண்ணப்பிக்க முடியும்.

    சில வங்கிகளில் வாடிக்கையாளராக இல்லாத தொழில்முனைவோர்களும் கூட இந்த InstaBIZ தளத்தை டவுன்லோட் செய்து பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

    இதில் உங்கள் கேஒய்சி மற்றும் பேங்க் ஸ்டேட்மென்ட் இரண்டையும் அப்லோட் செய்வதன் மூலம் உடனடியாக 10 லட்சம் ரூபாய்க்கான ஓவர்டிராஃப்டை பெற முடியும். அதேபோல் கரண்ட் கணக்கு மற்றும் அதற்கு உரிய கணக்கு எண் இரண்டையும் விண்ணப்பித்து உடனடியாக பெற முடியும். இந்த தொழில்நுட்ப யுகத்தில் InstaBIZ மட்டும் மிகவும் எளிய சுயதொழில் செய்ய வசதியான தளம் ஆகும். பல சிக்கல்களுக்கு இது ஒரே நொடியில் தீர்வு அளிக்கிறது.

    ICICI Bank launches ‘InstaBIZ’ for MSMEs: The very first comprehensive digital banking platform

    ஐசிஐசிஐ வங்கியின் சுயதொழில் பிரிவின் தலைவரான பங்கஜ் காட்கில் இதுகுறித்து கூறுகையில், சுயதொழில் என்பது இந்தியாவில் நிறைய வேலைவாய்ப்பை உருவாக்குகிறது, அதேபோல் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறது.

    சுயதொழில் முன்னேற வேண்டும் என்றால் தொழில் செய்வது எளிதாக இருக்க வேண்டும். அதேபோல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எளிதாக இருக்க வேண்டும். இதனால்தான் நாங்கள் InstaBIZஐ அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் மொபைல் ஆப் மற்றும் இணையம் மூலம் எளிதாக பரிவர்த்தனைகளை செய்ய முடியும். பலகட்ட சோதனைகளுக்கு பின் கொண்டு வரப்பட்டு இருக்கும் InstaBIZ ஆப் மூலம் எளிதாக நாடு முழுக்க பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

    115 சேவைகளை எளிதாக ஒரே ஒரு டிஜிட்டல் தளம் மூலம் செய்ய முடியும். இது தொழில்முனைவோர்கள் மற்றும் சுயதொழில் செய்வோர்கள் தங்கள் பணிகள் அனைத்தையும் ஒரே ஒரு டிஜிட்டல் தளம் மூலம் செய்ய வைக்கிறது. இது தொழில்முனைவோர்கள் மற்றும் சுயதொழில் செய்வோர்களை தேவையில்லாமல் வங்கிக்கு செல்ல வைப்பதை தடுக்கிறது.

    அதேபோல் துரிதமாக ஓடி எடுக்கவும், வங்கி வாடிக்கையாளராக இல்லாதவர்களை கூட பரிவர்த்தனை செய்ய வைக்கவும் உதவுகிறது. இந்த ஆல் இன் ஒன் தளமானது தொழில்முனைவோர்கள் மற்றும் சுயதொழில் செய்வோர்களுக்கு எளிதாக வங்கி பணிகளை முடித்து தருகிறது. இது அவர்களின் தொழிலையும் வளர்ச்சி அடைய வைக்கிறது என்று கூறியுள்ளார்.

    InstaBIZ தளத்தின் பயன்கள் மற்றும் சேவைகள்:

    1.உங்கள் வங்கி கணக்கை எளிதான டேஷ்போர்ட் மூலம் சோதிக்க முடியும்.

    2.இதன் மூலம் தொழில்முனைவோர்கள் தங்கள் வங்கி கணக்கின் கையிருப்பு, அளிக்கப்பட்ட பில்கள், வியாபாரம், வருமான இன்வாய்ஸ் அனைத்தையும் 24*7 நேரமும் சோதிக்க முடியும். இந்த சேவைகள் அனைத்து சோஹோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் பில்கள், வியாபாரம், வருமான இன்வாய்ஸ் அனைத்தையும் அளிக்க முடியும்.

    நிறைய ஊழியர்கள் இருக்கும் போது என்ன செய்வது:

    InstaBIZ மூலம் நிறைய ஊழியர்கள் இருக்கும் நேரத்தில் அவர்களின் பணிக்கு ஏற்றபடி தளத்தில் ஆக்ஸஸ் அளிக்கப்படும். அவர்கள் பார்க்கும் பணிக்கு ஏற்றபடி வங்கி கணக்கில் செய்ய வேண்டிய பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் ஊழியர்கள் எல்லோரும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

    நெட்வொர்க்கிங் மற்றும் வியாபார பிரச்சாரங்கள்:

    ஒருங்கிணைக்கப்பட்ட நெட்வொர்க்கிங் சிஸ்டம் மூலம் ஒரு தொழிலை எளிதாக முன்னேற்ற முடியும். InstaBIZ மூலம் எளிதாக தொழில்முனைவோர்களையும் வாடிக்கையாளர்களையும் இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். இது GlobalLinker மூலம் வழங்கப்படுகிறது. InstaBIZ மூலம் புரமோஷன் விளம்பரங்களையும் செய்ய முடியும்.

    இந்த பயனுள்ள InstaBIZ ஆப்பை Google Play Storeல் இருந்து எளிதாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இன்னும் சில நாட்களில் இது ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும். ICICI வங்கியின் 'Corporate Internet Banking' பக்கத்திற்கு சென்று இணையம் மூலமும் InstaBIZ சேவையை பெற முடியும்.

     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X