For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் 4ல் ஒரு வீட்டில் டிடிஎச் இருக்கும்.. 2018ல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

1 in 4 homes to own satellite dish by 2018
டெல்லி: கேபிள் டிவி மூலம் தொலைக்காட்சி பார்ப்பவர்களை விட டிடிஹெச் மூலம் நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கட்டண தொலைக்காட்சி மற்றும் டிடிஎச் வீடுகளின் எண்ணிக்கை 2018 ஆண்டில் சுமார் 251 மில்லியனை அடையும் என டிஜிட்டல் தொலைக்காட்சி ஆராய்ச்சியின் ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது...

2008 இல் 103 மில்லியனாகவும் பின்பு 2012 இறுதியில் 178 மில்லியன் ஆக இருந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் கணிசமாக உயரும் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இது தொடர்பான ஆய்வறிக்கையின் விபரம் வருமாறு:

உலகம் முழுவதும் டிடிஹெச் பயன்படுத்தும் 97 நாடுகளில் இருந்து கணக்கிடப்பட்ட கணக்கீடு ஆகும்.

செயற்கைக்கோள் கட்டண தொலைக்காட்சி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2012 மற்றும் 2018 இடையே சுமார் 73 மில்லியன் ஆக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து மட்டும் 24.4 மில்லியன், பிரேசில் 9.2 மில்லியன், இந்தோனேஷியா 6.8 மில்லியன் மற்றும் ரஷ்யா 5.9 மில்லியன் ஆகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய சேட்டிலைட் டிவி முன்னறிவிப்புகளானது மற்ற புதிய தளங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக செயற்கைக்கோள் கட்டண தொலைக்காட்சி சந்தாதாரர்களில் மொத்த எண்ணிக்கையானது 11 நாடுகளில் குறையக்கூடும் என தெரிவிக்கின்றன.

மதிப்பீடுகள் 2012 மற்றும் 2013 இன் இடையே மற்ற தளங்களுக்கு இடம்பெயர்வதே இதற்கு காரணம்.அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா, 2018 ல் செயற்கைக்கோள் கட்டண தொலைக்காட்சி துறையில் 61.1 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டதாக இருக்கும்.

டிடிஹெச் சந்தையின் முதல் இடத்தை அமெரிக்கா தக்கவைத்துள்ளது எனினும் அதன் மொத்த பங்கில் 2012 இல் 43.5% சதவிகிதமாக இருந்த வருவாய் 2018 ல் 38.7% சதவிகிதமாக குறையும்.

பிரேசில் 2012 மற்றும் 2018 இடையே DTH இன் வருவாய் ($ 3.5 பில்லியன்) சேர்க்கும் எனவும், கிட்டத்தட்ட அதன் மொத்த செயல்முறையில் இந்த தொகை இரட்டிப்பானதாக இருக்கும் எனவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

எனினும், செயற்கைக்கோள் கட்டண தொலைக்காட்சிகளின் வருவாய் 2012 மற்றும் 2018 இடையே 20 நாடுகளில் குறையக்கூடும். மலிவான பேகேஜ் தொகுப்புகளை கட்டாயப்படுத்தி வழங்க... அதிக போட்டி ஒரு காரணமாக உள்ளது.

மேலும், குறைந்த விலை டிடிஹெச் பேகேஜ் தொகுப்புகள் பல நாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை உருவாக்கும்.

இலவச சேனல்கள் பார்க்கும் குடும்பங்கள் உள்பட, கிட்டத்தட்ட 400 மில்லியன் வீடுகள் நேரடியாக டிடிஹெச் வழியாக தொலைகாட்சி சேவையை பெரும்.

இது 2012 இறுதியில் கணக்கிடப்பட்ட எண்ணிக்கை விட கிட்டத்தட்ட 100 மில்லியன் அதிகம். இதில் இந்தியாவின் பங்கு மட்டும் 30% சதவிகிதம் அதாவது 30 மில்லியன் இணைப்புகளை சேர்க்கும் பொறுப்பை பெறுகிறது.

2018 இல் உலகில் உள்ள மொத்த தொலைக்காட்சி இணைப்புகளில் கால் பங்கு அதாவது 25% டிடிஹெச் இணைப்பு இருக்கும். இந்த சதவிகிதம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The number of pay satellite TV (DBS or DTH) homes will reach 251 million by 2018, up from 178 million at end-2012 and 103 million at end-2008, according to a new report from Digital TV Research covering 97 countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X