For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி தமிழக வீரர்கள் 2 பேர் பலி

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு பேர் என தெரியவந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் குரேஷ் பகுதியில் நேற்று அதிகாலை திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது.

10 soldiers killed in Avalanche in Jammu-Kashmir among them one belongs to Tamilnadu

இதில் பனிச்சிகரத்தின் அடிவாரத்தில் இருந்த ராணுவ முகாம் புதையுண்டது. இதில் முகாமுக்குள் இருந்த வீரர்கள் உயிருடன் புதைந்தனர்.

அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும் பனிப்பொழிவின் ஆதிக்கத்தால் மீட்புப்பணி தொய்வடைந்தது.

இந்நிலையில் தற்போது பனிச்சரிவில் புதையுடண்ட 10 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒருவர் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளவரசன் என்றும் மற்றொருவர் மதுரையைச் சேர்ந்த சுந்தரப்பாண்டி என்பதும் தெரியவந்துள்ளது. வீரர்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் மாயமாகியுள்ள வீரர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பந்திப்போரா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு ராணுவ வீரர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Avalanche hits in jammu-Kashmir's Gurez in Army camp. In this incident 10 soldiers were killed. Among them 2 persons belongs to Tamil nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X