For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மைக்ரோசாப்ட் புது சிஇஓ சத்யா பற்றிய 10 பளிச் விஷயங்கள்

By Siva
Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சிஇஓவான சத்யா நாதெல்லா பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார். மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர் அங்கேயே தங்கிவிட்டார்.

இந்நிலையில் சத்யா பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

சத்யா ஹைதராபாத்தில் பிறந்து அங்கு உள்ள பள்ளி ஒன்றில் படித்தார். மணிபால் பல்கலைக்கழகத்தில் பி.இ. முடித்த பிறகு அவர் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். படிப்பை முடித்த அவர் அங்கேயே வேலையில் சேர்ந்தார்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

சத்யா கடந்த 1992ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கு முன்பு அவர் சன் மைக்ரோசிஸ்டம்ஸில் வேலை பார்த்தார். 1992ம் ஆண்டில் இருந்து சத்யா மைக்ரோசாப்டில் தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

என்ஜினியர்

என்ஜினியர்

மைக்ரோசாப்ட்டின் சிஇஓவாக இருந்த ஸ்டீவ் பால்மர் 1980ல் இந்த நிறுவனத்திற்கு வரும் முன்பு ப்ராக்டர் அன்ட் கேம்பிள் நிறுவனத்தில் துணை ப்ராடக்ட் மேனேஜராக இருந்தார். ஆனால் சத்யா மணிபால் பல்கலைக்கழகத்தில் பி.இ. பட்டமும், விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்ற என்ஜினியர் ஆவார்.

எம்.பி.ஏ.

எம்.பி.ஏ.

சத்யா என்ஜினியர் மட்டும் அல்ல சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றுள்ளார்.

பதவி உயர்வுகள்

பதவி உயர்வுகள்

சத்யாவுக்கு பல்வேறு முறை பதவி உயர்வு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு அவர் க்ளவுட் அன்ட் என்டர்பிரைஸ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் சர்வர் அன்ட் டூல்ஸ் பிசினஸ் தலைவர், ஆன்லைன் சேவை பிரிவின் ஆர் அன்ட் டியின் மூத்த துணை தலைவர், பிசினஸ் பிரிவின் துணை தலைவர், கன்ஸ்யூமர் மற்றும் வணிக பிரிவின் பொது மேலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.

தயாரிப்புகள்

தயாரிப்புகள்

வின்டோஸ் அசுர், வின்டோஸ் சர்வர், எஸ்க்யூஎல் சர்வர், சிஸ்டம் சென்டர் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் டூல்ஸ் ஆகிய தயாரிப்பு பிரிவுகளுக்கு தலைமை தாங்கியுள்ளார் சத்யா.

க்ளவுட்

க்ளவுட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவுட் பிரிவின் மூளையாக செயல்படுபவர் சத்யா நாதெல்லா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்

சம்பளம்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை சத்யாவின் சம்பளம் 7.67 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது தவிர அவரிடம் மைக்ரோசாப்ட் பங்குகள் உள்ளன.

கேட்ஜெட்

கேட்ஜெட்

46 வயதாகும் சத்யா கடந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு எக்ஸ்பாக்ஸ் ஒன் கேம் கன்சோல் வாங்கியுள்ளார். அவர் 41 மெகாபிக்சல் கேமரா உள்ள நோக்கியா ஓவிஐ போன் வைத்துள்ளார்.

சக்திவாய்ந்த நபர்

சக்திவாய்ந்த நபர்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டதன் மூலம் சத்யா நாதெல்லா உலகின் சக்தி வாய்ந்த டெக் எக்சிகியூட்டிவாக ஆகி உள்ளார்.

English summary
Know 10 things about Satya Nadella, the new CEO of Microsoft.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X