For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடையை மீறி பப்ஜி கேம் விளையாட்டு… 10 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

Google Oneindia Tamil News

குஜராத் : தடையை மீறி பப்ஜி கேம் விளையாடிய 10 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பப்ஜி கேம் விளையாட காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தடையை மீறி பப்ஜி கேம் தொடர்ந்து விளையாடபட்டு வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

10 university students arrested; who played PUBG Game

இதனைத் தொடர்ந்து, சூரத்தில் பொது இடத்தில், யாரையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பெரும் சத்தத்துடன் பப்ஜி கேம் விளையாடிய பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் நேரில் வந்து கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி, அவர்களை விடுவித்தனர்.

உயிரை குடிக்கும் ப்ளூவேல் விளையாட்டை மத்திய அரசு தடை செய்தது போல், இளைய தலைமுறையினரை வன்முறைக்கு தூண்டும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில், நாட்டிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

இளைய தலைமுறையினரை தன்வசம் கவர்ந்த பப்ஜி கேம். 'பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்' (Player Unknown's Battlegrounds) என்பதன் சுருக்கம்.

இப்ப பிரிஞ்சு பாஜகவை அடிப்போம்.. பிறகு சேர்ந்து ஆட்சியைப் பிடிப்போம்.. காங். செம பிளான்!இப்ப பிரிஞ்சு பாஜகவை அடிப்போம்.. பிறகு சேர்ந்து ஆட்சியைப் பிடிப்போம்.. காங். செம பிளான்!

இது ஒரு இணையதள online விளையாட்டு. இதை மொபைல் போன்களிலும் விளையாடலாம். பப்ஜி விளையாட்டின் செல்வாக்கு மட்டும் அல்ல அதன் மீதான மோகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளிடையே வன்முறை போக்கு அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஒரு பக்கம் பப்ஜி கேம் என்றாள் TikTok ஆபத்தான செயலியாக மாறி வருகிறது. இதனை பயன்படுத்தத் தொடங்கியவர்களின் குணநலன் முற்றிலும் மாறத்தொடங்குவதாக கூறப்படுகிறது.

English summary
Ban on playing the PUBG Game; 10 university students arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X