For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு- மத்திய அரசு அதிரடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அதிரடியாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய பொருளாதாரம் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

100% FDI in airlines: Air India will have to shape up or ship out

மத்திய அரசு இன்று அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. பாதுகாப்பு, விமான போக்குவரத்து துறையில் 100%; மருந்துகள் துறையில் 74% நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இது 2015-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் இதுவாகும். இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் "இன்று பிரதமர் தலைமையில் நடந்த உயர்நிலைக் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவை நேரடி அன்னிய முதலீட்டுக்கான மிகப் பெரிய திறந்த பொருளாதார இடமாக மாற்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், இந்த முடிவு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்; புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

English summary
In order to provide major impetus to employment and job creation in India, the government on Monday liberalized its foreign direct investment strategy, bring most of the sector under automatic approval route. The decision, which is second in series after radical liberalization in FDI in November 2015, was taken at a high-level meeting chaired by Prime Minister Narendra Modi today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X