For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்- 100 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் தாவ ரெடியாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மேற்கு வங்கத்தில் மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்

    கொல்கத்தா: பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் அரசை கவிழ்ப்பதில் பாஜக படுதீவிரமாக இறங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸின் 100 எம்.எல்.ஏக்கள் தம்முடன் பேசிவருவதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த பகீரத முயற்சிகளை மேற்கொண்டார் மமதா பானர்ஜி. மத்தியில் பாஜக அல்லாத அரசை அமைக்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து வந்தார் மமதா பானர்ஜி.

    100 TMC MLAs touch with me, WB BJP President

    மேற்கு வங்கத்தில் பாஜகவினராகவே மாறி இடதுசாரிகள் தேர்தல் வேலை செய்தனர். லால் சலாம், இன்குலாப் ஜிந்தாபாத் கோஷங்களுக்குப் பதில் ஜெய் ஸ்ரீராம் முழக்கங்கள் எழுந்தன.

    இதனால் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் பகுதியை பாஜக கைப்பற்றியது. தற்போது திரிணாமுல் காங்கிரஸை அப்படியே கபளீகரம் செய்வதில் பாஜக படுதீவிரமாக இருக்கிறது.

    திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை அப்படியே வளைத்துப் போட்ட பாணியில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அப்படியே வளைக்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

    பாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி!! பாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி!!

    அதில், பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது தம்முடன் 40 எம்.எல்.ஏக்கள் தொடர்பில் இருக்கின்றனர் என்றார். என்னுடன் 100 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். 2019-ல் பகுதி லோக்சபா இடங்களை கைப்பற்றுவோம் என்றோம். அது நடந்துவிட்டது.

    2021-ல் திரிணாமுல் காங்கிரஸை காணாமல் ஆக்குவோம்.. என்கிறோம். அதுவும் நடக்கும் என கூறியுள்ளார்.

    English summary
    West Bengal BJP President Dilip Ghosh has climed that 100 TMC Mlas touch with him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X