For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி, உத்தரகாண்ட், குஜராத், ராஜஸ்தான்... பாஜக சதமடித்த 5 மாநிலங்கள்

|

டெல்லி: இதுவரை வெளியான லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி கிட்டத்தட்ட 5 மாநிலங்களில் பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் முன்னிலை பெற்று அபார வெற்றியை குவித்துள்ளது.

9 கட்டங்களாக நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக எண்ணப் பட்டு வருகிறது. இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் படி பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக சில மாநிலங்களில் பாஜக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் சூழல் நிலவுகிறது.

குஜராத்...

குஜராத்...

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி முதலமைச்சராக உள்ள குஜராத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது.

டெல்லி...

டெல்லி...

அதேபோல், டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.

ராஜஸ்தான்...

ராஜஸ்தான்...

ராஜஸ்தானில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் அனைத்திலும் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது பாஜக.

கோவா...

கோவா...

மேலும், கோவாவில் உள்ள இரண்டு லோக்சபா தொகுதிகளிலும், சண்டிகரில் உள்ள ஒரு லோக்சபா தொகுதியிலும், இமாச்சலில் உள்ள நான்கு லோக்சபா தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

உத்தரகாண்ட்...

உத்தரகாண்ட்...

அதேபோல், உத்தரகாண்டில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளிலும் பாஜக கையே ஓங்கியுள்ளது.

English summary
In Some states like Delhi, Uttarakhand, Rajastan, Gujarat the BJP is in leading position in all the constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X