For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல்... 101 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.. அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் டிசம்பரில் நடக்க இருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் 101 பேர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தில் டிசம்பரில் நடக்க இருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் உள்ள வேட்பாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் யார் என்ன மாதிரியான குற்றங்கள் செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

101 பேர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 64 வேட்பாளர்கள் மிகவும்
மோசமான குற்றங்களை செய்தவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல் வேட்பாளர்களின் சொத்து மதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. யாரெல்லாம் கோடீஸ்வரர்கள் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள்

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள்


குஜராத் சட்டசபையின் 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு டிசம்பர் 14-ல் நடைபெறுகிறது. இதில் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிட மொத்தம் 822 பேர் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். இதில் 101 பேர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 64 வேட்பாளர்கள் மிகவும்
மோசமான குற்றங்களை செய்தவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

குற்றத்தின் வகை

குற்றத்தின் வகை

இந்த பட்டியலில் 2 பேர் கொலை சம்மந்தப்பட்ட குற்றமும், 7 பேர் கொலை முயற்சி குற்றமும் செய்துள்ளனர். 2 பேர் பாலியல் வன்புணர்வு சார்ந்த குற்றமும், 2 பேர் பெண்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். 3 பேர் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறார்கள்.

கட்சி வாரியாக

கட்சி வாரியாக

கட்சிகளின் அடிப்படையில் காங்கிரசில் 22 பேரும், பாஜகவில் 25 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் 6 பேரும், ஆம் ஆத்மியில் 2 பேரும், 23 சுயேச்சை வேட்பாளர்களும் குற்றப்பின்னனி கொண்டவர்கள். அதேபோல் காங்கிரசில் 18 பேரும், பாஜகவில் 13 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் 2 பேரும், ஆம் ஆத்மியில் 1 வரும், 14 சுயேச்சை வேட்பாளர்களும் மிகவும் மோசமான குற்றங்களை செய்தவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

சொத்து எவ்வளவு

சொத்து எவ்வளவு

அதேபோல் பொருளாதார அடிப்படையில் 822 பேரில் மொத்தம் 199 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். காங்கிரசில் 67 பேரும், பாஜகவில் 66 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் 3 பேரும், ஆம் ஆத்மியில் 5 பேரும், 31 சுயேச்சை வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள் ஆவர். மேலும் சாராசரியாக வேட்பாளர்கள் சொத்து மதிப்பு 2.39 கோடி என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது. 4 பேர் எந்த விதமான சொத்தும் சேர்க்கவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள் .

English summary
In the second phase of the Gujarat assembly elections, 101 out of the 822 candidates have declared pending criminal cases against them. Out of the 101, there are 64 candidates who have declared serious criminal cases against them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X