For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலைக்களம் ஆகும் கோட்டா.. ஒரே மாதத்தில் 102 பிஞ்சு குழந்தைகள் பலி.. ராஜஸ்தான் மருத்துவமனை மர்மம்!

Google Oneindia Tamil News

ஜெய்பூர்: ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 102ஐ தொட்டுள்ளது.

ராஜஸ்தானின் கோட்டா பகுதி, இந்தியாவில் அதிக கல்வி நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு இருக்கும் ஜேகே லோன் மருத்துவமனை எனப்படும் அரசு மருத்துவமனை மிகவும் பிரபலம். தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த ஜேகே லோன் மருத்துவமனைதான் தற்போது கொலைக்களமாக மாறியுள்ளது. இங்கு கடந்த டிசம்பர் 1ம் தேதியில் இருந்து நேற்று வரை சரியாக ஒரு மாதத்தில் 102 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

வருது வருது குஜராத் ராஜ்யசபா தேர்தல்... இம்முறையும் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க காங். தீவிரம்வருது வருது குஜராத் ராஜ்யசபா தேர்தல்... இம்முறையும் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க காங். தீவிரம்

நேற்று எத்தனை

நேற்று எத்தனை

இந்த ஜேகே லோன் மருத்துவமனை நேற்று மட்டும் 2 குழந்தைகள் பலியாகி உள்ளனர். கடந்த 72 மணி நேரத்தில் மொத்தம் 11 குழந்தைகள் பலியாகி உள்ளனர். கடந்த 2018ல் இங்கு டிசம்பர் மாதம் 77 குழந்தைகள் பலியானார்கள். 2019 டிசம்பர் 30, 31 தேதிகளில் மட்டும் 9 குழந்தைகள் பலியானார்கள்.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

மொத்தமாக 102 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் எந்த மருத்துவமனையிலும் இப்படி ஒரு கொடுமை நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பாஜக அரசு, மாநில காங்கிரஸ் அரசு என்று இந்த பிரச்சனை எல்லோரையும் குழப்பி உள்ளது. இது குறித்து விசாரிக்க மத்திய அரசு தனியாக குழு அமைக்க உள்ளது.

குஜராத் விவசாயிகளை கதறவைக்கும் காப்பான் பட ஸ்டைல் பூச்சிகள்- பாக். ஏவிவிட்டதா?குஜராத் விவசாயிகளை கதறவைக்கும் காப்பான் பட ஸ்டைல் பூச்சிகள்- பாக். ஏவிவிட்டதா?

குழு

குழு

இந்த மர்ம மரணம் குறித்து விசாரிக்க மாநில அரசு சார்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவின் அறிக்கையில், மருத்துவமனையில் எந்த குறைபாடும் இல்லை. போதுமான அளவில் படுக்கை வசதி உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. கருவிகளை சரியாக இயங்குகிறது. மருத்துவர்கள் எதுவும் தவறு செய்யவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் இங்கு நிறைய குறைபாடுகள் இருக்கிறது. சுத்தமான உபகாரணங்கள் இல்லை. சோதனை கருவிகள் இல்லை. இன்குபேட்டர் சரியாக வேலை செய்யவில்லை. மருத்துவமனை வளாகத்திற்குள் பன்றிகள் சுற்றுகிறது என்றெல்லாம் புகார் வைக்கப்பட்டுள்ளது.

அரசு மறுப்பு

அரசு மறுப்பு

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்துள்ளது. குழந்தை குறை மாதத்தில் பிறப்பதும். குறைந்த எடையுடன் பிறப்பதும்தான் இதற்கு காரணம். மருத்துவர்கள் யாரும் தவறு செய்யவில்லை. நிர்வாகமும் தவறு செய்யவில்லை. குழந்தைகள் குறை மாதத்தில் பிறக்கிறார்கள். அவர்களை காக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர் .

மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தலாமா.. மனசாட்சி இல்லையா.. வைகோ ஆவேசம்மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தலாமா.. மனசாட்சி இல்லையா.. வைகோ ஆவேசம்

கடவுளே

கடவுளே

ஆனால் இந்த கொடூரமான தொடர் மரணத்திற்கு என்ன காரணம் என்று இன்னும் முழுமையாக விவரம் வெளியாகவில்லை. இதற்கு பின் நிறைய மர்மங்கள் இருக்கலாம். 102 குழந்தைகள் ஒரு மாதத்தில் இறப்பது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது.

என்ன மர்மம்

என்ன மர்மம்

மருத்துவ நிர்வாகம் எதையோ மறைகிறது. இதில் நிறைய சதி வலைகள் பின்னப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக இப்போதுதான் மக்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். விரைவில் இதில் பல உண்மைகள் வெளி வரலாம் என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இதை வைத்து பாஜக ராஜஸ்தானில் கடுமையாக பிரச்சாரம் செய்து விவாதங்களை செய்து வருகிறது. இந்த பிரச்சனையை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
102 Infants dead in Single month: Kota Hospital in Rajasthan became a nightmare for people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X