For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எபோலா பாதித்த லைபீரியாவிலிருந்து டெல்லி வந்த 112 இந்தியர்கள்.. தீவிர பரிசோதனை!

Google Oneindia Tamil News

மும்பை: எபோலா பாதித்த லைபீரியாவில் இருந்து 112 இந்தியர்கள் டெல்லி, மும்பை வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் பரிசோதனைக்குப் பிறகே வெளியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"லைபீரியாவிலிருந்து மும்பை வந்த விமானத்தை தனி இடத்திற்குக் கொண்டு சென்று, பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தினை அவர்கள் வந்தடைந்தனர்" என்று மும்பை சர்வதேச விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

112 Indians Arriving from Ebola-Hit Liberia; Mumbai, Delhi Airports Gear Up

எபோலா பாதிப்பிற்கான அறிகுறிகள் இல்லாத பயணிகள் சோதனைக்குப் பின் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட பயணிகள் நேரடியாக குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு பரிசோதனைப் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பப்பட்டனர்.

இந்த பயணிகள் லைபீரியா, வட ஆப்ரிக்கா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்தடைந்தவர்கள் ஆவர்.

இந்த பரிசோதனைக்கு முக்கிய காரணமே அவர்கள் மூலமாக எபோலா பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் என்று மேலும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Elaborate precautionary arrangements have been put in place at the Delhi and Mumbai airports to screen 112 stranded Indians who will arrive today by various flights from and around Ebola-hit Liberia, authorities have said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X