For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தின ஸ்பெஷல்.. அனைத்து மதத்தவருக்காகவும் திறந்து விடப்பட்ட ஸ்பானிஷ் மசூதி!

By Rajeswari
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள 112 வருட பழமை வாய்ந்த ஸ்பானிஷ் மசூதி அனைத்து மதத்தினருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஹைதராபாதில் உள்ள 112 வருட பழைமை வாய்ந்த ஸ்பெயின் நாட்டு மூரீஷ் கட்டிடக்கலை மூலம் கட்டப்பட்ட ஜமா மஸ்ஜித் ஐவான்-இ-பேகும்பெட் என்ற பெருமை வாய்ந்த மசூதியை, இந்திய சுதந்திர தினத்தையொட்டி அனைத்து மதத்தினரும் உள்ளே வந்து பார்வையிடலாம் என அறிவித்துள்ளனர்.

112-Year-old Spanish Mosque in Hyderabad Open for every Indian on Independence Day

1906 ல் கட்டப்பட்ட இந்த மசூதி பேகம்பெட்டில் அமைந்துள்ளது. இதை பைகாஸ் என்ற குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். நூறு ஆண்டு பழைமை வாய்ந்த இந்த இடத்தை ஆகஸ்ட் 15 காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம்.

"விசிட் மை மாஸ்க் (Visit my mosque)" என்ற நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக அனைத்து மதத்து மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி மூரிஷ் மற்றும் துருக்கி நாட்டு கலை நயத்துடன் கட்டப்பட்டிருக்கும் இந்த மசூதியை கண்டு களிக்க வேண்டுமென்று பைகாஸ் குடும்பத்தை சார்ந்த எம்.ஏ. ஃபைஸ் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த முயற்சியால் இந்தியாவில் இருக்கும் அனைத்து மதத்தாரும், மொழி, ஜாதி, மத கட்டுப்பாடு இல்லாமல் ஒன்று சேர வேண்டும் என்பதே இதன் நோக்கம் என கூறுகின்றனர். இது மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

English summary
Independence Day Popularly known as the 'Spanish Mosque' for its Moorish architecture, the Jama Masjid Aiwan-e-Begumpet, for the first time, has invited people from all religions to visit it on August 15, between 10 am and 7 pm, as part of the 'Visit My Mosque' programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X