For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலியோவுக்கு பதில் மஞ்சள்காமாலை சொட்டு மருந்து: மேற்கு வங்கத்தில் 114 குழந்தைகள் பாதிப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக, மஞ்சள் காமாலைத் தடுப்பு மருந்தை தவறுதலாக அளித்ததால் பாதிக்கப்பட்ட 114 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஹூப்ளியில் உள்ள காதுல் என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அப்போது, சுகாதாரப் பணியாளர்கள் தவறுதலாக போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக, மஞ்சள் காமாலைத் தடுப்பு மருந்தை அளித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, மருந்துகள் மாற்றி வழங்கப்பட்ட 114 குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுகாதாரப் பணியாளர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்களின் போராட்டத்தை அடுத்து அலட்சியமாக செயல்பட்டதாக கூறி சுகாதாரத்துறை பணியாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், குழந்தைகளின் உடல்நிலை தற்போது சீராகிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
At least 114 children were hospitalised in Hooghly district after they were mistakenly given Hepatitis B vaccine orally instead of pulse polio drops.Six persons were suspended for the lapse that triggered protests with angry villagers locking up health workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X