For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவனந்தபுரம்- மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன

By Mathi
Google Oneindia Tamil News

கொச்சி: கேரளாவில் திருவனந்தபுரம்- மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் அலுவா மற்றும் காருகுட்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தடம் புரண்டது. ரயிலின் 12 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகி, பக்கவாட்டில் தடம் புரண்டன.

இச்சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் மாற்று ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் எர்னாகுளம் மற்றும் திரிசூர் நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் சேதம் அடைந்த தண்டவாளங்களை சீரமைக்க சுமார் 10 மணிநேரம் ஆகலாம் என்பதால் எர்ணாகுளம் - திரிசூர் வழிதடத்தில் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

English summary
12 coaches of the Thiruvananthapuram-Mangaluru Express derailed near Karukutty station on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X