For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு... பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு?

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில் பாஜகவுக்கு 104 அல்லது 120 எம்எல்ஏக்களா, எத்தனை பேர் ஆதரவு அளிப்பர்?.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் வேளையில் பாஜகவுக்கு இப்போது இருக்கும் 104 எம்எல்ஏக்கள் 120-ஆக மாறுமா என்பது தெரியவரும்.

    கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுநரின் அழைப்பின் பேரில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவுள்ளது.

    இந்நிலையில் காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாக பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டது. எம்எல்ஏக்கள் விலை போய்விடுவர் என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

    காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் 3 பேரை கடத்திவிட்டனர் என்று எச் டி குமாரசாமி கூறியிருந்தார். ஆரம்பத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் காணவில்லை என்று கூறியிருந்த நிலையில் அவர்கள் 78 பேரும் பத்திரமாக உள்ளனர் என்று காங்கிரஸ் தரப்பு கூறியது.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    கர்நாடகத்தில் கர்நாடகா ப்ரக்யாவந்தா ஜனதா கட்சி சார்பில் ஒருவரும், சுயேச்சையாக ஒருவரும் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி முறையே ராணிபென்னூர் தொகுதியில் சங்கரும், முல்பகால் தொகுதியில் நாகேஷ் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் மதில் மேல் பூனையாக இந்த பக்கம் குதிப்பதா அந்த பக்கம் குதிப்பதா என்ற யோசனையில் உள்ளனர்.

    16 எம்எல்ஏக்கள்

    16 எம்எல்ஏக்கள்

    ஆனால் பாஜகவோ மற்ற கட்சியில் அதிருப்தியில் உள்ள 16 எம்எல்ஏக்கள் எங்களிடம் வந்து சேருவர் என்று கூறிவருகிறது. பாஜகவின் ஷோபா கரந்த்லாஜே கூறுகையில் எங்கள் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும். காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் எங்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பர். அதன்படி 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிறார். ஆனால் பாஜகவுக்கு இருப்பதோ 104 எம்எல்ஏக்கள்தான்.

    நிச்சயம் ஆதரவு

    நிச்சயம் ஆதரவு

    இதனிடையே காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த 20 லிங்காயத்து சமூக எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவளிப்பர் என்று நம்பப்படுகிறது. இதனால் பாஜகவின் பலம் 104 -ஆகவே இருக்குமா அல்லது 120-ஆக உயருமா என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

    English summary
    The mood in the BJP camp was upbeat on Friday. The BJP’s Shobha Karandlaje says that the party would easily go through the trust vote and will have the support of 16 MLAs from the Congress-JD(S). Camp. The party says that it would clear the floor test with the support of 120 MLAs. The BJP has 104 MLAs in the House.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X