For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் ரசாயன வாயு கசிவு - பள்ளி மாணவர்கள் 120 பேர் திடீர் மயக்கம்

டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக 120 மாணவர்கள் கண் எரிச்சல், மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள துக்ளகாபாத் என்னும் பகுதியில் விடுதி வசதியுடன் கூடிய ராணி ஜான்சி சர்வோதய கன்யா வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இதில் இன்று காலை ரசாயன கன்டெய்னரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் சுமார் 120 குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. சில நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் சில மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் ஆசிரியர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். வாயு கசிவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

120 students hospitalized after gas leak in South Delhi

மனிஷ் சிசோடியா

இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், "பள்ளியின் அருகே இருந்த கிடங்கு ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 30 பேர் மயக்கமடைந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

உடல் நிலையில் முன்னேற்றம்

உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மயங்கிவிழுந்த மாணவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து மருத்துவர்களிடம் பேசியுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
More than 120 school students were admitted to hospital after a gas leak from a container depot in Delhi's Tughlakabad on Saturday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X