For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெற்காசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி 5 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: 12 - வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளை வருகிற 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கவுகாத்தியில் தொடங்கி வைக்கிறார்.

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டி கவுகாத்தி (அசாம்) மற்றும் ஷில்லாங்கில் (மேகாலயா) வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 நாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

12th South Asian Games are to be held in Guwahati

கவுகாத்தியில் 16 விளையாட்டுகளும், ஷில்லாங்கில் 6 விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. வருகிற 5-ந் தேதி கவுகாத்தியில் நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
PM narendra Modi will inaugurate South Asian Games competition on feb 5th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X