உத்தரகண்ட்டில் ஏற்பட்ட பயங்கர விபத்து.. 13 பேர் பலி, பலர் படுகாயம்.. பிரதமர் மோடி இரங்கல்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனின் சக்ராட்டா தெஹ்சில் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள சக்ராட்டா தெஹ்சில் என்ற பகுதியில் இன்று பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது.
சென்னையில் 7 வயது பெண் குழந்தை கழுத்தை அறுத்து கொலை.. கொடூர தந்தை தலைமறைவு
புல்ஹாத்- பைலா சாலையில் வாகனம் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

திடீர் விபத்து
இந்த விபத்து குறித்து உடனடியாக மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், விபத்து நடந்த பகுதி டேராடூனில் இருந்து சுமார் 170 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் மீட்புப் படையினரால் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளைத் தொடங்க முடியவில்லை. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக டேராடூன் மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

13 பேர் பலி
இந்த விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகத் தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும்" என்று அவர் தெரிவித்தார்.

பலர் படுகாயம்
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தோருக்கும் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் இரங்கல்
இந்நிலையில், இந்த பயங்கர விபத்திற்குப் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.