For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன நடக்கிறது கேரளாவில்.. அடுத்தடுத்து பாலியல் புகார்களுக்குள்ளாகும் பாதிரியார்கள்..!

13 முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாவமன்னிப்பு கேட்ட பெண்ணிடம் பாவம் செய்த பாதிரியார்கள்- வீடியோ

    திருவனந்தபுரம்: தன்னை பிஷப் ஒருவர் 13 முறை பலாத்காரம் செய்ததாககேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி போலீசில் புகார் அளித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    அடுத்தடுத்து கேரளாவில் பாதிரியார்கள் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பது கிறிஸ்தவ மதத்தினரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் 5 பாதிரியார்கள், பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்னொரு பிஷப் மீது புகார் எழுந்துள்ளது.

    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. அதில் நிர்மலா என்ற கன்னியாஸ்திரியாக சேவையாற்றி வருகிறார். இந்நிலையில், கோட்டயம் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த, 2014ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னை முதல்முறையாக கற்பழித்தார் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் தொடர்ந்து ஆய்வு செய்ய வந்தபோதெல்லாம் தன்னை 13 முறை பிஷப் கற்பழித்துள்ளார் என்றும், இது குறித்து சர்ச் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்போது போலீசில் புகார் அளிக்க முன்வந்ததாகவும் கூறியுள்ளார். இதனிடையே புகாருக்கு உள்ளான பிஷப், நிர்மலா மீது ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், கன்னியாஸ்திரியை வட இந்தியாவுக்கு பணியிட மாற்றம் செய்ததால்தான், பழிவாங்கவே இவ்வாறு தன்மீதுபுகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த இரு புகார்கள் குறித்தும், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    போலீசார் நடவடிக்கை

    போலீசார் நடவடிக்கை

    இதனிடையே புகாருக்கு உள்ளான பிஷப், நிர்மலா மீது ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், கன்னியாஸ்திரியை வட இந்தியாவுக்கு பணியிட மாற்றம் செய்ததால்தான், பழிவாங்கவே இவ்வாறு தன்மீதுபுகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த இரு புகார்கள் குறித்தும், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    தாய்மை உணர்வு

    தாய்மை உணர்வு

    சில தினங்களுக்கு முன்புதான் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாக சிக்கினர் சில பாதிரியார்கள். இந்த நிலையில் கன்னியாஸ்திரி ஒரு புகாரைக் கிளப்பியுள்ளார். கன்னியாஸ்திரி சேவையானது புனிதமானது. இறைவனுக்காக தன்னை அர்ப்பணிப்பவர்களே இந்த அந்தஸ்தை அடைகிறார்கள். அதனால்தான் இவர்களுக்கு முக்கியத்துவமும் தரபப்டுகிறது. அன்பு, கடமை, நேர்மை, பொறுமை, தாய்மை உணர்வு அனைத்தும் கலந்த உணர்வுள்ளவர்களே கன்னியாஸ்திரிகள்.

    மன்னிக்க முடியாத ஒன்று

    மன்னிக்க முடியாத ஒன்று

    கன்னியாஸ்திரிகளுக்கே இந்த நிலை என்றால், மற்ற பெண்களின் நிலை பற்றி யோசிக்க முடியவில்லை. பயந்த சுபாவம், வெட்கம், தயக்கம் காரணமாக எத்தனையோ கன்னியாஸ்திரிகளை பாதிரியார்கள் பயன்படுத்தி கொள்வது மன்னிக்க முடியாத ஒன்று. போலியான சுயலாபத்துக்காக மதங்களை நாடும் இதுபோன்ற சிலரை அந்த சமூக மக்களே ஏற்று கொள்ள மாட்டார்கள்.

    ஏன் இவ்வளவு தாமதம்?

    ஏன் இவ்வளவு தாமதம்?

    அதேநேரத்தில் கன்னியாஸ்திரி நிர்மலா, 4 வருடங்கள் கழித்து இப்போது ஏன் போலீசல் புகார் அளிக்க வேண்டும்? இவ்வளவு நாள் என்ன செய்தார்? முதல் முறை கற்பு சூறையாடினால் பலாத்காரம் எனலாம். ஆனால் 13 முறை என்றால், இது எப்படி பலாத்காரம், கற்பழிப்பு வகையில் சேரும்? முதல்முறை கற்பு பறிபோகும்போதே வெளிஉலகில் வந்து தாராளமாக புகார் அளித்திருக்கலாமே? என பல கேள்விகள் வந்து போகின்றன.

    English summary
    13 Times raped a nun by bishop in Kottayam,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X