For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்று தந்தி… இன்று மணியார்டர் – விரைவில் "மூடுவிழா” காணும் பல்லாண்டு கால சேவை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா முழுவதும் தற்போது வரை பயன்பாட்டில் உள்ள மணியார்டர் முறைக்கு மூடு விழா நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 135 ஆண்டு கால சேவை முடிவு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தபால் துறை துணை தலைவர் ஷிகா மாத்தூர் குமார், " 1880 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இச் சேவை நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதி்கமான தபால் நிலையங்கள் மூலமாக நேரடி பணம் பட்டு வாடா செய்யப்பட்டு வருகிறது.

135-yr-old money order service bids silent goodbye

நவீன காலத்தில் செல்போன் , இண்டர் நெட் முறையிலான எஸ்.எம்.எஸ், இ-மெயில் ஆகியவை மூலம் செய்திகள் விரைவாக அனுப்ப துவங்கியதை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தபால் நிலையத்தில் செயல்பட்டு வந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் உடனடியாக பணத்தை பெறும் வகையி்ல் எலக்ட்ரானிக் மணியார்டர் முறை புழக்கத்தில் உள்ளது.

மணியார்டருக்கு மூடு விழா நடத்துவதன் மூலம் 135 ஆண்டு கால பழமையான படிவத்தை பூர்த்தி செய்து பணம் அனுப்பும் முறை முடிவுக்கு வர உள்ளது" என கூறினார்.

English summary
A 135-year-old legacy comes to an end. Like in the case of the telegram, India Post has quietly discontinued the traditional money order service, which was an integral part of the department since 1880, facilitating pan-India door-delivery of funds to a payee from over 1,55,000 post offices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X