For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.99 அடியாக தொடர வேண்டும்.. உச்சநீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139.99 அடியாக தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139.99 அடியாகதான் தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு மறுப்பதாகவும் இதுவே கேரள வெள்ளத்திற்கு காரணம் என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியது.

நீர்மட்டத்தை குறைக்க பரிந்துரை

நீர்மட்டத்தை குறைக்க பரிந்துரை

இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை 139.99 அடியாக குறைக்க முல்லைப் பெரியாறு துணைக்கண்காணிப்புக்குழு நேற்று பரிந்துரைத்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை இன்று மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139.99 அடியாகதான் தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பரிந்துரையை ஏற்றது சுப்ரீம்கோர்ட்

பரிந்துரையை ஏற்றது சுப்ரீம்கோர்ட்

ஆகஸ்ட் 31 வரை முல்லைப் பெரியாறில் தற்போது உள்ள 139.99 அடி நீர் தேக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் துணைக்கண்காணிப்புக்குழு பரிந்துரையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

துணைக்குழுவுக்கு உத்தரவு

துணைக்குழுவுக்கு உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிக்கப்படாமல் இருப்பதை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் 139.99 அடிக்கு மேல் நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
Supreme court ordered to save 139.99 ft water in Mullai Periyaru dam till August 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X