For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தகிக்கும் காஷ்மீர் போர்க்களம்.. ஒரே மாதத்தில் 440 பேருக்கு கண் பாதிப்பு.. அதில் 14% சிறுவர்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் அடிக்கடி நடந்து வரும் துப்பாக்கி சூட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமிகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜுன் 9 வரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 14 சதவீத சிறுவர்கள் காயமடைந்து அறுவை சிகிச்சைக்குள்ளாகியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் தொடங்கி இதுவரை 93 முறை துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் 14 சதவீத சிறுவர் சிறுமியர் துப்பாக்கி சூட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

14% of pellet gun victims in Kashmir are below 15

மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின்படி, 440 பேரின் கண்கள் பாதிப்படைந்துள்ளன. இதில் 60 லிருந்து 70 பேர் 15 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள். அடுத்த வாரத்தில் அறுவை சிகிச்சை செய்ய 40 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட 250 பேர் 2வது முறை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்திருக்கின்றனர். இதிலும் பெரும்பான்மையானவர்கள் சிறுவர் சிறுமியர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

English summary
Statistics showing that 14 per cent of those injured by pellets since July 9 are below the age of 15 and face complicated surgery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X