For Daily Alerts
Just In
ஆந்திராவில் ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு- 14 பேர் மயக்கம்- 3 பேர் கவலைக்கிடம்
சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் அருகே ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் 14 பேர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Gas Leakage in Andhra Pradesh , Reason Styrene Gas

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் பந்தபள்ளியில் ஹட்சன் பால் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை திடீரென 14 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்கள் மயக்கம் அடைந்தது தெரியவந்தது.
உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது- ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடம்