For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் சோகம்... வேன்-லாரி மோதியதில் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு!

Google Oneindia Tamil News

கர்னூல்:ஆந்திர மாநிலத்தில் வேனும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Recommended Video

    அதிகாலை பயங்கரம்… வேன் மீது மோதிய லாரி… 14 பேர் பலியான கோர விபத்து!

    இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளையும், மருத்துவ உதவிகளையும் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    14 people were tragically killed in a collision a van and a lorry in Andhra Pradesh

    ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரியும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.அதில் பலரது உடல் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன.

    பிரதமர் வருகை: டுவிட்டரில் டிரெண்டாகும் #GoBackModi... #TNWelcomesModi! பிரதமர் வருகை: டுவிட்டரில் டிரெண்டாகும் #GoBackModi... #TNWelcomesModi!

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 வாகனங்களுக்கு இடையே இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த உடல்களை கிரேன் உதவியுடன் போலீசார் மீட்டனர். மேலும், படுகாயம் அடைந்த நிலையில் சிலர் மீட்கப்பட்டனர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளையும், மருத்துவ உதவிகளையும் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    In Andhra Pradesh, 14 people were tragically killed in a collision between a van and a lorry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X