For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான பரபரப்பான சிசிடிவி வீடியோ வெளியீடு

தூத்துக்குடியில் 5 நாட்களாக நீடித்து வந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நிவாரண நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி பலியானவர்களுக்கு ரூ.20 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1.5 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர்.

இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அந்த தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மட்டும் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பியதால் 144 தடை உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Newest First Oldest First
7:56 PM, 27 May

தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் இணையதள சேவை
7:56 PM, 27 May

போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் அறிவிப்பு
7:56 PM, 27 May

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியுடன் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் தகவல்
7:25 PM, 27 May

புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்துக்குத் தீவைப்பு
7:25 PM, 27 May

புதுவை அருகே கனகசெட்டிக்குளம் பகுதியில் பரபரப்பு
7:25 PM, 27 May

பயணிகளை இறக்கி விட்டு விட்டு தீ வைத்தனர்
7:25 PM, 27 May

பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் இல்லை
7:25 PM, 27 May

தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்
7:22 PM, 27 May

போலீஸ் தரப்பு துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்காக காட்சிகள் வெளியீடா?
7:22 PM, 27 May

பொதுமக்கள் தரப்பு காட்சிகளை மட்டுமே காவல்துறை வெளியிட்டுள்ளது
7:21 PM, 27 May

20 நிமிட சிசிடிவி காட்சிப் பதிவை வெளியிட்டது தூத்துக்குடி போலீஸ்
7:21 PM, 27 May

முகத்தை மூடியபடி சிலர் கார்களுக்கு தீவைக்கும் காட்சி
7:21 PM, 27 May

கல்வீசித் தாக்கும் நபர்கள் வீடியோல் உள்ளனர்
7:21 PM, 27 May

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் தாக்கப்படுகின்றன
7:21 PM, 27 May

சில இடங்களில் காட்சிகள் ஒட்டி வெட்டப்பட்டது போல உள்ளது
7:21 PM, 27 May

4 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்
5:28 PM, 27 May

பாஜக சார்பில் தூத்துக்குடிக்கு பயணம்: தமிழிசை அறிவிப்பு
5:28 PM, 27 May

5 பேர் கொண்ட குழுவுடன் பயணம்: தமிழிசை சவுந்தராஜன்
5:28 PM, 27 May

ஸ்டாலின், திருநாவுக்கரசர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தயார்: தமிழிசை
5:13 PM, 27 May

தூத்துக்குடியில் 5 மண்டல ஐ.ஜி.,களுடன் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆலோசனை
5:13 PM, 27 May

எஸ்.பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது
4:46 PM, 27 May

தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கு அனுமதி இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
4:45 PM, 27 May

திமுக ஆட்சி காலங்களில் துப்பாக்கி சூடுகளுக்கு 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார்
4:45 PM, 27 May

எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஜெயக்குமார்
2:53 PM, 27 May

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்- ஸ்டாலின்
2:53 PM, 27 May

சட்டம் ஒழுங்கு டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி. மீதும் கொலைவழக்கு தேவை
2:52 PM, 27 May

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் முதல்வர், டிஜிபி, ஐஜி உள்ளிட்டோர் கூட்டுச் சதி
2:52 PM, 27 May

துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
2:35 PM, 27 May

தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாததே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்குக் காரணம்: கனிமொழி
2:35 PM, 27 May

இனியாவது ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
READ MORE

English summary
144 restriction gets back in Tuticorin today. It was imposed after protests wake up in that place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X