For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக ஆட்சியோட லட்சணம்... குஜராத்தில் 2 ஆண்டுகளில் 15,000 பச்சிளம் குழந்தைகள் மரணம்!

Google Oneindia Tamil News

காந்திநகர்: பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத் மாநிலத்தில் 2 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் 15,000 பச்சிளம் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக அம்மாநில துணை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சருமான நிதின் பட்டேல் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு நிதின் பட்டேல் அளித்த பதில் விவரம்:

15,000 Newborns Died in Gujarat Hospitals in 2 Years, says Health Minister

குஜராத்தில் முக்கிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2018-19ம் ஆண்டில் மொத்தம் 1,06,000 குழந்தைகள் பிறந்தன. இவர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 71,774 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க 1 வருடம் ஆகும்.. ஆனாலும் இந்தியாவிற்கு ஒரு குட் நியூஸ்.. நம்பிக்கைகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க 1 வருடம் ஆகும்.. ஆனாலும் இந்தியாவிற்கு ஒரு குட் நியூஸ்.. நம்பிக்கை

இந்த குழந்தைகளில் 15,013 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர்., அதாவது பிறந்த குழந்தைகளில் 21% பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக அகமதாபாத்தில் 4,322 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளன. வதோதராவில் 2,362, சூரத்தில் 1,986 குழந்தைகள் உயிரிழ்ந்துள்ளன.

பச்சிளம் குழந்தைகளின் மரணங்களைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு நிதின் பட்டேல் கூறினார்.

எதற்கெடுத்தாலும் குஜராத்தை முன்னுதாரணமாக பாஜகவினர் காட்டுவது வழக்கம். தற்போது குஜராத்தில் 2 ஆண்டுகளில் மட்டும் 15,000 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதுவும் அகமதாபத்தில்தான் அதிகம் என்கிறார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்.

அந்த அளவுக்கு குஜராத் மாநில சுகாதாரத்துறை மோசமாக இருக்கிறது என்பதையே இது அம்பலமாக்கியுள்ளது. இனியும் குஜராத்தை பாஜகவினர் முன்னுதாரணமாக காட்டுவார்களா?

English summary
Gujarat Deputy Chief Minister and Health Minister Nitin Patel said that 15,013 infants died during treatment in 2018-19 which is 21 per cent of the admitted children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X