For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடத்தில் மாட்டிக் கொண்ட நாயின் தலை... 15 போலீசார் ”போராடி” மீட்டனர்!

பெங்களூரில் ஒரு குடத்தில் தலை மாட்டி கொண்ட நாயை 15 போலீஸார் போராடி மீட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் ஒரு குடத்தில் நாயின் தலை மாட்டிக் கொண்டதைத் தொடர்ந்து 15 போலீஸார் போராடி மீட்டனர்.

பெங்களூரில் வீதிகளில் சுற்றி திரிந்து வந்த குட்டி நாய் ஒன்று உணவுக்காக அலைந்தது. அப்போது அங்கு குப்பை தொட்டி அருகே கிடந்த ஒரு பிளாஸ்டிக் குடத்தை பார்த்தது.

15 policemen rescues dog whose head struck with Pitcher in Bangalore

அதில் உணவு இருக்கும் என்ற எண்ணத்தில் நாய் தலையை விட்டது. அத்தோடு அதன் தலை எடுக்க முடியாமல் நாய் தவித்தது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களும் நாயின் தலையை எடுக்க மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

தகவலறிந்த 15 போலீஸார் அந்த இடத்துக்கு வருகை தந்தனர். அப்போது அந்த நாய் சுவாசிக்க கடினமாக இருந்தது. இதையடுத்து சுவாசிக்க ஏதுவாக அந்த குடத்தில் துளை போட்டனர். பின்னர் குடத்தை பிரித்து அந்த குட்டி நாயை மீட்டனர். இதனால் மக்கள் மகிழ்ந்தனர்.

கழுத்து மீட்கப்பட்டவுடன் நாய் துள்ளி குதித்து ஓடியது. மனிதாபிமானத்துடன் நாயை மீட்க வந்த போலீஸாருக்கு மக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த நாயை போலீஸார் மீட்கும் புகைப்படங்கள் ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் கோயல் தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
A little dog's head struck with Pitcher recently. 15 cops tried to rescue the Dog by cutting the pitcher.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X