For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

16 ஆண்டுகளைக் கடந்தது “இரும்பு மனுஷி” இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம்

Google Oneindia Tamil News

டெல்லி: மணிப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் 16 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

மணிப்பூரைச் சேர்ந்த பிரபல சமூகசேவகி இரோம் ஷர்மிளா. இவர் மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கடந்த 2000 ஆம் ஆண்டு, நவம்பர் 5 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

15 Years And Still Fighting; this is Irom Sharmila

ராணுவ சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிராக காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை, தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறி கடந்த ஆண்டு காவல்துறையினர் கைது செய்து பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுதலை செய்தனர்.

இதையடுத்து, மணிப்பூர் தலைநகர் இம்பாலிலுள்ள சிறையிலிருந்து விடுதலையான இரோம் ஷர்மிளா, மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இரோம் ஷர்மிளாவின் போராட்டம் 16 ஆம் ஆண்டை எட்டியுள்ளது. 15 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்ததையொட்டி இம்பாலில் ஷர்மிளாவை கவிஞர்கள் சிலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் தலைநகர் டெல்லியில் அவருக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக தன்னுடையை 15 ஆவது வயதில் உண்ணாவிரதத்தை தொடர்ந்த அவர் தற்போது 30 வயதை தாண்டியுள்ளார்.

English summary
One such news that may or may not have passed before your eyes during recent years is about the incredible struggle of Irom Sharmila Chanu, a human rights activist who is about to enter the 16th year of hunger strike with a single demand to repeal a controversial act Armed Forces Special Powers Act (AFSPA).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X