For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் 15000 பேர் தேர்ச்சி

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: ஐஏஎஸ் எனப்படும் இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இதுகுறித்து யுபிஎஸ்சி-யின் செயலர் ஆஷிம் குரானா, டெல்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

15000 candidates passed the preliminary of IAS

இந்த ஆண்டு ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4.63 லட்சம் பேர், கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடந்த முதல்நிலைத் தேர்வை எழுதினர். நாடு முழுவதும் 71 நகரங்களில் உள்ள 2,186 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 50 நாள்களுக்குள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும், வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்க உள்ள முதன்மைத் தேர்வுக்கு, இணையவழியில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று ஆஷிம் குரானா தெரிவித்தார்.

இந்தத் தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்றஇணையதளத்தில் பார்க்கலாம்.

English summary
UPSC has announced that there are 15000 candidates passed the preliminary exam of IAS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X