For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சக்சஸ்.. கொரோனா வைரஸ்க்கு எதிராக சோதனை தடுப்பூசி .. 6 மாதத்தில் மனிதர்களை வைத்து பரிசோதனை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Coronavirus:A candidate vaccine is ready for pre-clinical trials|கொரோனாவுக்கு எதிராக சோதனை தடுப்பூசி

    புனே: கொரோனா வைரஸை தடுப்பதற்கான முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் சூப்பர் முன்னேற்றம் ஏற்பட்டு சோதனை தடுப்பூசி தயார் நிலையில் உள்ளது. அடுத்த 6 மாதத்தில் மனிதர்களை வைத்து பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுளள்து.

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1700ஐ தாண்டி உள்ளது. சுமார் 70000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீனாவின் வுகான் நகரம் முழுவதுமே மரண பீதியில் உள்ளது.

    இந்த சூழலில் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) மற்றும் அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான கோடஜெனிக்ஸ் ஆகியவை இணைந்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன.

    "ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை

    மருத்துவ பரிசோதனைகள்

    மருத்துவ பரிசோதனைகள்

    இதில் முதல் பாசிட்டிவ்வான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (COVID-19)க்கு எதிரான முதல்கட்ட மருத்துவ பரிசோதனைகள் தற்போது தயார் நிலையில் உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் மனிதர்களை வைத்து சோதிக்க முடிவு செய்துள்ளார்கள்.

    திருப்புமுனை

    திருப்புமுனை

    உலக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இந்நிலையில், புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆய்வகமும், அமெரிக்காவைச் சேர்ந்தகோடஜெனிக் ஆய்வகமும் இணைந்து அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட செயற்கை வைரஸைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட SII- கோடஜெனிக்ஸ் தடுப்பூசி ஒரு முக்கியமான திருப்புமுனையாகும், ஏனெனில் இது வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்க எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்கிறார்கள்.

    எங்கள் தடுப்பூசி

    எங்கள் தடுப்பூசி

    புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தொழில் அதிபருமான ஆதார் பூனவல்லா, நேற்று பிரலப ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில். "வழக்கமான அணுகுமுறைகள் பொதுவாக ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை ஒரு தடுப்பூசியை முழுமையாகப் பயன்படுத்த ஆகும். எங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த கூட்டாளியான கோடஜெனிக்ஸின் ஆய்வகத்தில் தடுப்பூசியை உருவாக்குவதன் மூலம் நாங்கள் ஏற்கனவே முன்னேறியுள்ளோம். எங்கள் தடுப்பூசி-வைரஸ் , ஒரிஜினல் வைரஸுக்கு ஒத்ததாக இருக்கிறது, மேலும் இதன் மூலம் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் " என்றார்.

    விரைவில் மருந்து

    விரைவில் மருந்து

    அடுத்த 6மாதத்தில் மனிதர்களை வைத்து பரிசாதனை தொடங்கும் என்று கூறிகிறார்கள். இந்தியா, அமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் முதற்கட்ட சோதனையை நடத்தி வருகின்றன. கொரோனா என்ற மனித குலத்தை அழிக்கும் வைரஸ்ஸை அழிக்க உலகமே ஒன்றாக போராடி வருகிறது. இதில் எந்த நாடு கண்டுபிடித்தாலும் நிச்சயம் உலகிற்கு அது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    English summary
    A candidate vaccine is ready for pre-clinical trials, and possibly even human trials within six months
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X